முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தொழில்நுட்பம் ஏன் கதாசிரியர்களை வெளியேற்றுகிறது?

‘சாய் வித் சித்ரா’ எழுத்தாளர் வட்ட மேஜை விவாதத்தின் ஒரு அத்தியாயத்தில் பங்கேற்பாளர்கள் ஏன் தமிழ் சினிமாவில் திரைக்கதையாளர்களுக்கு இடம் குறைவாக உள்ளது எனும் தலைப்பில் பேசிய விசயங்கள் என் சிந்தனையைத் தூண்டின. தமிழ் சினிமாச் சூழலை வைத்து அவர்கள் அவதானித்தவை (தற்போதைய இயக்குநர்கள் ஹீரோவுக்குக் கதை சொல்லி ‘புரோஜெக்டை’ ஏற்க வைப்பதால் அங்கு கதாசிரியரின் இடம் இல்லாமல் போவது, இயக்குநர்களின் ஈகோ, அவர்கள் இலக்கியம் வாசிக்காதது, தயாரிப்பாளர்களுக்கு திரைக்கதை அறிவு குறைவாக இருப்பது) சரியாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் இன்னும் பரந்துபட்ட கோணத்தில் இதைப் பார்க்க முடியும். அடிப்படையில் நவீன சினிமா எப்படியான கதைகூறல் நிகழ்வு? அதில் எழுத்தாளருக்கோ அவரது கதைக்கோ இடமுண்டா? இதுதான் எனக்குள்ள கேள்வி. இல்லை என்பதுதான் என் பதில். சினிமா ஒரு தொழில்நுட்பக் கதை. கதாசிரியரின் சொற்கள், நடிகரின், கதைசொல்லியின் உடல், உணர்ச்சிகள், குரலின் அவசியமின்றி கதைசொல்ல உதவும் உபகரணத்தை நாம் தொழில்நுட்பம் என்று இங்கு புரிந்துகொள்ளலாம். ஒரு நாடகத்தில் வரும் ‘செட்’, தானியங்கி / ஊழியர்கள் இயக்கும் கருவிகள், சினிமாவில் ஒளிப்...

பெயரிடுதல் பித்யுத் பூஸன் ஜேனா தமிழில் ஆர். அபிலாஷ்

  தூங்கி விழித்ததும் அது என் அருகே கிடக்கக் கண்டேன் - ஐந்து மெல்லிய சமச்சீரற்ற முனைகள் செதுக்கப்பட்ட இடைவெளிகளுடன் பிரிந்திருக்கும் வினோதமான ஒரு பொருள் . மேலும் , நீ அது ஒரு கரம் என்று சொன்னாய் . அதற்கு தான் கரமென்று அழைக்கப்படுகிறோம் எனத் தெரியுமா என்று வியந்தேன் . மேலும் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறோம்   என அறிய வந்தால் அது அதிர்ச்சிக்குள்ளாகாதா ? முதன்மையான ஒரு விளக்கத்துக்காக நான் நாள் முழுக்கக் காத்திருந்தேன் . ஆனால் எனக்கு அப்போது அதன் மொழி தெரியவில்லை , அதற்கு பேச வாய் இல்லாததால் . நாள் முழுக்க நான் நிறைய வாயடித்துவிட்டு இதை எழுதினேன் . Naming - Bidyut Bhusan Jena After waking up I saw it lying next to me –   A strange object, forked into five thin and   uneven ends separated by sculpted space.   And you told me it was hand. Then I wondered if it knew it was called   a hand. And would it not be surprised   if it came to know that it was called so?     And I waited the whole day expecting...

டி20 உலகக்கோப்பை 2026 - இந்தியாவின் வெளியேற்றம் நிகழுமா?

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் எதையும் கணிக்க முடியாது . ஆனாலும் இந்தியாவின் நிலைமை பால் என்று நினைத்து பால்டாயிலைக் குடித்த குடிகாரனின் நிலைதான் . தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கிடைத்த மரண அடி அவர்களுடைய சராசரி ஓட்ட விகிதத்தை வெகுவாக இறக்கிவிட்டது . ஆகையால் அவர்கள் இனி அடுத்துள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது . ஜிம்பாப்வேவும் , மே . இ தீவுகள் அணி இரண்டுமே இந்தியாவைப் போன்றே மோசமான தோல்விகளைப் பெற்று சராசரி ஓட்ட விகிதத்தில் நமக்குப் பக்கத்தில் வரவேண்டும் . மே . இ தீவுகள் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வென்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்க வேண்டும் , அல்லது தென்னாப்பிரிக்கா அடுத்து ஆடும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதான சில அம்புலிமாமா கணக்குகளை ஊடகங்கள் சொல்கின்றன . அப்படியெல்லாம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை . இந்தியாவை அரை இறுதிக்குப் போக அனுமதிக்கக் கூடாது என்றே அவர்கள் ஒரு போட்டியை விட்டுக் கொடுத்தால் என்ன ஆகும் ? தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் அப்படி யோசிக்கும் குசும...