முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவ்தத் பட்டாநாயக்கை ஏன் செருப்பைக் கழற்றி அடிக்கக் கூடாது?



நேற்றை ஹிந்து நாளிதழில் வெளியான Vedantic Attachment and Islamic Idolatry எனும் கட்டுரையைப் படித்தபோது நமது வலதுசாரிகளில் சற்றே புத்திசாலிகளாக உள்ளவர்கள் கூட காவி வண்ணம் பூசிக் கொள்ளும் போதுஎப்படி கோமாளிகளாகிப் போகிறார்கள் என வியப்பேற்பட்டதுஅதாவது இந்துத்துவாவை ஆதரிக்கும் போது எந்த தர்க்க நேர்த்தியும் அற்ற பிதற்றலாகசுத்த பேத்தலாக அவர்களின் கருத்துக்கள் அமைகின்றனஆனால் தத்துவம்பொருளாதாரம் என்றெல்லாம் வரும் போது நிதானமாக உரையாடுகிறார்கள்தாமரைப் பூவைக் காட்டினால் சுத்த லூசாகி விடுகிறார்கள்இவர்களின் எழுத்துக்கள் சற்றே அறிவு படைத்தவர்களைக் கூடமுடியை பிய்த்துக் கொள்ள வைக்கிறதுசொல்லப் போனால் எதிர்த்தரப்பினரை தம் தரப்பை ஏற்றுக் கொள்ளவைப்பதல்லதம் கோமாளித்தனக் கருத்தக்களால் அவர்களை பைத்தியம் பிடிக்க வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. “பேட்மேன்” படத்தில் வரும் நோக்கர் பாத்திரத்துடன் நமது வலதுசாரிஅறிவுஜீவிகளை தாராளமாக ஒப்பிடலாம். குறிப்பாக, தேவ்தத் பட்டாநாயக்கின் இந்த கட்டுரை அப்படியான உச்சகோமாளித்தனம்.

இதைப் பாருங்கள்:

//In Mecca, a large number of historic sites, including mosques, and even sites associated with Prophet Muhammad’s life, are being broken by the guardians of the Kaaba. This is being done to prevent these sites from becoming shrines, for that would amount to idolatry, which is forbidden in Islam. These structures and sites are being replaced by luxury hotels, a place for pilgrims to stay, a pragmatic solution that brings wealth to the land.

Why is such pragmatism not displayed when it comes to much less significant Islamic structure in India? Does the attachment of a section of Muslims to Babri Masjid lean towards idolatry? Or is it a fight for justice over a land dispute, and a case of land grabbing stretched over decades? Is the compensation not enough?//

மக்காவில் வழிபாட்டிடங்கள் உடைக்கப்படுவதைக் கொண்டு அவர் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுவது இங்கு தெளிவு. ஆனால் இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா?

மக்காவில் அரசாங்கத்தால் நபியின் மனைவி கதீஜாவின் வீடு உள்ளிட்ட வரலாற்று கட்டமைப்புகள் உடைக்கப்படுவதும் இந்தியாவில் அயோத்தியில் இந்துத்துவ கும்பலால் ஒரு மசூதி நொறுக்கப்படுவதும் ஒன்றல்ல. அங்கே வஹாபிய மேலாதிக்கம் காரணமாக, இடத்தையோ சிலையையோ ஒருவர் வழிபடக்கூடாது எனும் நோக்கில், சில தர்ஹாக்களும் இடங்களும் அழிக்கப்படலாம். அது நியாயமா என்பது வேறு கேள்வி. ஏனென்றால் அது இஸ்லாத்துக்குள் தூய்வாதத்தை ஏறகலாமா எனும் கேள்வி சம்மந்தப்பட்டது.
ஆனால் அதுவும் ஒரு மக்கள் திரளை அந்நியப்படுத்தி எச்சரிக்கும் நோக்கில் மசூதியை இடிப்பதும் ஒன்றல்ல.
இஸ்லாமியரின் வழிபாட்டிடம் நவீன இந்தியாவில் இடிக்கப்படுவதற்கு இரு விளைவுகள் உண்டு:

1) அந்த தலத்தில் வழிபாடு செய்து வந்த மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி வருகிறது. உதாரணமாக, நாளை இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான மசூதியை ஒரு கும்பல் இடித்து அங்கு கோயில் கட்ட நினைத்தால் அது நடைமுறை சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு வழிபாட்டிடம் என்பது மக்கள் சமூகமாக்கல் செய்கிற இடம்; அது மக்கள் தம்மை சமூகமாக உணர்வதற்கான இடம்; அங்கே தானதர்மம், சமூகத்தொண்டு ஆகிய நற்செயல்களும் நடக்கலாம். அங்கே அந்த மக்கள் திரளுக்கான பண்பாட்டு மூலதனம் உற்பத்தியாகிறது (கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சடங்குகள் குறித்த பயிற்சியினால்). வழிபாட்டிடங்கள் வெறுமனே நம்பிக்கை சார்ந்த ஒரு விசயம் மட்டுமல்ல. மக்காவில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டாலும் மக்கள் ஒரு ‘பெருங்கதையாடல்’ வழிபாட்டிடத்துக்காவது செல்லலாம். ஆனால் இந்தியாவில் நீங்கள் தர்காவில் இருந்து மசூதிக்குப் போக முடியாது. நீங்கள் மசூதியில் இருந்து வெற்றிடத்துக்கும், அழிவு குறித்த கற்பனை வெளிக்குள்ளும் தான் சென்றாக வேண்டும். பட்டாநாயக் கேட்பது போல மக்கள் தங்களுக்கு தரப்பட்ட மாற்று இடத்தில் ஒரு மசூதி கட்டிக் கொண்டு நகர முடியாது. வழிபாட்டிடம் என்பது கழிப்பறை அல்ல தோன்றுகிற இடத்துக்கு மாற்றுவதற்கு. அது நீங்கள் வசிக்கிற இடத்தில் அருகில், அல்ல திரளான மக்களின் வாழ்விடத்துக்கு மையத்தில் இருக்க வேண்டும்.

2) இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே, அதாவது காலனியாதிக்க காலத்தில் இருந்தே, எரிந்து வரும் பிரச்சனை அயோத்தியா வழக்கு. பாபர் மசூதி இடிக்கப்படுவதை இஸ்லாமிய மக்கள் அரை நூற்றாண்டுகளாக இந்தியா முழுக்க இஸ்லாமியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நடத்தப்படுவதாக அஞ்சப்படும் தாக்குதல்களின் பின்னணியில் வைத்தே பார்ப்பார்கள். மக்காவில் இடிக்கப்படுவதை அந்த ஊர் மக்கள் அப்படிப் பார்க்க மாட்டார்கள். அயோத்தி என்பது இந்துக்கள்-இஸ்லாமியர் இரு சாராருக்கும் இங்கு ஒரு குறியீடு; மக்காவில் ஒரு தூணோ வீடோ இடிக்கப்படுவது இப்படியான குறியீடு ஆகாது.

தேவ்தத் பட்டாநாயக் இந்த கட்டுரையில் இப்படி சம்மந்தமில்லாத இரு விசயங்களை முடிச்சுப் போட்டு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவது விஷமத்தனமானது. அவர் தொன்மங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, சற்று ஆழத்துடன் எழுதுகிறவர் தான். அந்தளவில் எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் இத்தகைய மதவாத அடிவருடிக் கட்டுரைகளை அவர் எழுதும் போது என்றாவது கையில் மாட்டினால் சாணியை முக்கிய செருப்பால் அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. அமைதியான என்னையே இப்படி சிந்திக்க வைக்கிறார் பாருங்கள். அது தான் இவரைப் போன்றவர்களின் வெற்றி. அதனால் வேண்டாம். அவரை அடுத்த முறை எங்காவது நேரில் பார்க்க நேர்ந்தால் மனதுக்கு ரெண்டு அடி கொடுத்து விட்டு கடந்து விடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.