பெண்களின் ஆதிக்கமும் புழக்கமும் ஒவ்வொரு வாழ்வியல் தளத்திலும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அந்நிய நாட்டில் கடவுச்சீட்டு இன்றி தவிக்கும் அகதி போல் அவஸ்தைப்படுகிறான் இப்பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு ஆண். ஆணுக்கு முற்றிலும் நேர்மாறான நுண்ணுணர்வும் மொழியும் தேவைகளும் கொண்டவர்கள் பெண்கள். இந்த நெருக்கடி நம் சினிமாவில், சமூக அரசியலில், குடும்பத்தில், வேலையிடங்களில் எப்படியெல்லாம் பிரபலித்திருக்கிறது என இந்த புத்தகம் அலசுகிறது. ஆணின் இடத்தில் இருந்து பெண்ணை அணுக இது முயற்சிக்கிறது. பெண்ணை எப்படியெல்லாம் புரிந்து கொள்ளலாம் என விரிவாக பேசி விட்டு, பெண்ணைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே அவர்களைப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமம் என முடிக்கிறது.
வாங்குவதற்கு:
கருத்துகள்