த.வெ.க ஆதரவாளர்: அகல் விளக்கு மோகனைக் கைது பண்ணக் கூடாது. அவர் தப்பே பண்ணல.
நாம்: அப்போ தப்பே நடக்கலியா?
த.வெ.க ஆதரவாளர்: நடந்துச்சு. தப்பான புக்கையெல்லாம் வாங்கி வச்சிருக்காங்க.
நாம்: தப்பான புக்கைத் தயார் பண்ணினது தப்பில்லையா?
த.வெ.க ஆதரவாளர்: அதெப்படிங்க தவறாகும்? அந்த உரிமை எல்லாருக்கும் உண்டு.
நாம்: அப்படீன்னா தப்பான புத்தகத்தை சரியான புத்தகமுன்னு நம்பி வாங்குற உரிமையும் தேர்வுக் குழுவினருக்கு உண்டே.
த.வெ.க ஆதரவாளர்: அதெப்படி? அவங்களுக்கு அது தப்பான புத்தகமுன்னு தெரியணுமே...
நாம்: அப்போ அது தப்பான புத்தகமா?
த.வெ.க ஆதரவாளர்: ஆமாங்க.
நாம்: அப்போ அதை வேணுமுன்னே பதிக்கிறதுக்கு தப்பில்லையா?
த.வெ.க ஆதரவாளர்: அவர் வேணுமுன்னே பதிப்பிக்கலங்க. அவரால அதுதான் முடியும். தெரியாம பண்ணீட்டாருங்க. அதுக்காக கைது பண்ண முடியாது.
நாம்: அப்போ தேர்வுக் குழுவினராலும் அதுதான் முடியுங்க. அவங்களும் தெரியாமப் பண்ணீட்டாங்க. அவங்க தப்பு பண்ணினதா ஏன் உங்க அரசு கோர்ட்டில சொல்லுது?
த.வெ.க ஆதரவாளர்: ஓ அப்படி வரீங்களா? அவங்க லஞ்சம் வாங்கிட்டு தப்பான புக்கைத் தேர்வு பண்ணிட்டாங்க.
நாம்: யார் கொடுத்தது?
த.வெ.க ஆதரவாளர்: யாரோ...
நாம்: யாரோ யாருக்கோ கொடுத்த லஞ்சத்தைப் பற்றி ஏன் கவலைப்பட்டு ஆக்ஷன் எடுக்கணும்?
த.வெ.க ஆதரவாளர்: தப்பான புக்கை வாங்குறதுக்காக கொடுத்த லஞ்சம் அது. ஆக்ஷன் எடுக்காம எப்பிடி?
நாம்: சரி யார் கொடுத்தது?
த.வெ.க ஆதரவாளர்: யாரோ....
நாம்: சரி, எந்தப் புக்கைச் சொல்றீங்க?
த.வெ.க ஆதரவாளர்: அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களோட புக்ஸ்.
நாம்: அதோட பதிப்பாளர் யாரு?
த.வெ.க ஆதரவாளர்: மோகன்.
நாம்: அவர்தானே லஞ்சம் கொடுத்ததா சொல்றீங்க?
த.வெ.க ஆதரவாளர்: அது எப்படிச் சொல்ல முடியும்? என்ன ஆதாரம் இருக்குது?
நாம்: அவர் லஞ்சம் கொடுக்கலைன்னா, அதுக்கு ஆதாரம் இல்லைன்னா, எதுக்கு அதை வாங்கினதா சொல்ற நிபுணர் குழுவைக் கைது பண்ணனும்?
த.வெ.க ஆதரவாளர்: என்ன இப்பிடி சாதாரணமா சொல்றீங்க? பெரிய தப்பு நடந்திருக்கு?
நாம்: யார் பண்ணினது?
த.வெ.க ஆதரவாளர்: இப்படிக் கேள்வில்லாம் கேட்கக் கூடாது. நான் ஒரே வரில சொல்றேன். அதை ஏத்துக்குங்க: நிபுணர் குழு ஆணை கொடுத்ததால் தப்பான புக்ஸை வாங்கிட்டாங்க. அவங்கதான் லஞ்சம் வாங்கித் தப்பு பண்ணினாங்க.
நாம்: யாருக்கு ஆர்டர் கொடுத்தாங்க? யார் அவங்களுக்கு லஞ்சம் கொடுத்தாங்க?
த.வெ.க ஆதரவாளர்: அதான் நான் கேள்வி கேட்கக் கூடாதுன்னு சொல்லீட்டேன்ல. திரும்பத் திரும்பக் கேட்டுட்டு. நான் போறேன். அதுக்கு முன்ன கடைசியா சொல்றேன்: யாரும் லஞ்சம் கொடுக்கல, ஆனால் நிபுணர் குழு லஞ்சம் வாங்கினாங்க. யாரும் தப்பான புக்ஸை பதிப்பிச்சு தப்பு பண்ணல. ஆனால் நிபுணர் குழு அந்த புக்ஸை வாங்கித் தப்பு பண்ணினாங்க.
நாம் பளாரென்று ஒரு அறை கொடுத்துவிட்டு: உன்னை நான் அடிக்கல. ஆனா யாரோ அடிச்சிட்டாங்க. அப்படி வச்சிக்க.
கருத்துகள்