
அண்மையில் நீயா நானா விபரீதமான திரைப்பட ரசிகர்களையும் இன்ஸ்டா ரசிகர்களையும் பற்றி விவாதம் ஒன்றை நடத்தி இருந்தது. அந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியில் "ரசிகன்" நாவலைப் பேசியிருக்க வேண்டும் என நினைத்தேன் (ஏனோ அத்தகைய விசயங்களுக்குள் விவாதம் போகவில்லை). ஏனென்றால் ரசிக மனநிலை எனும் நுகர்வுப் பண்பாட்டில் ஒரு அறிவுஜீவி சிக்கினால் அவன் தன் அறிவும் இலக்கிய நுண்ணுணர்வும் அரசியல் மனநிலையும் சினிமா நுகர்வைப் போல மற்றொன்றுதான் எனும் இடத்திற்கு நகர்ந்தால் என்னவாகும் என்பதே அந்நாவல். அதில் காதல் கூட ஒரு நுகர்வுப் பண்டம்தான்.
அந்நாவலை அவ்வப்போது படித்து உணர்வுகளையும் கருத்துக்களையும் நண்பர்களும் வாசகர்களும் பகிர்வதுண்டு. இப்போது சிவகுமார் எனக்கு எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.
கருத்துகள்