முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபு தர்மராஜ்

 எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மரணம்


குமரி மாவட்டக்காரர்களிடம் ஒருவித slapstick நகைச்சுவை, எள்ளல், பகடி அதிகமாக இருக்கும். யாரைப் பற்றிப் பேசினாலும் அவரை ஒரு கோட்டுச்சித்திரமாக மட்டுமே முன்வைக்க முடியும். யாரையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதோ மதிப்பதோ இல்லை. எங்களில் பலருக்கும் செண்டிமெண்டுகளில் நம்பிக்கை இல்லை. அதனாலே ராஜ்கிரண் தன் தாயைக் கட்டிப் பிடித்து அழும்போது எனக்கெல்லாம் வினோதமாக இருக்கும். இப்போதும்கூட நானும் என் உறவினர்களும் அல்லது குடும்பத்தினருமாக அமர்ந்து உணவருந்தினால் ஒரே சிரிப்பும் அமர்க்களமுமாகத்தான் இருக்கும். ஆனால் யாரைப் பற்றிப் பேசிச் சிரிக்கிறோம் என்றால் அது எங்கள் பெற்றோர், உறவினர்கள், சித்தப்பா, பெரியப்பா, ஊர்க்காரர்கள், ஆசிரியர்கள் என்றுதான் இருக்கும். கூட்டத்தில் எங்களுடன் இருப்பவர்களை வசதியாக விட்டுவிட்டு மற்றவர்களை கிண்டலும் கேலியுமாக காய்ச்சி எடுப்போம். நாங்கள் என்றில்லை பெரும்பாலான வீடுகளில், தெருக்களில், இடங்களில் இப்படித்தான் இருக்கும். ஒரு சின்ன எள்ளல் இல்லாமல் மக்களால் அங்கு ஒட்டுறவாட முடியாது. இந்த slapstick நகைச்சுவையின் உச்சம் என்று நான் பிரபு தர்மராஜைச் சொல்வேன். அவர் தன் அங்கதத்தின் வழியாக ஒரு உயர்ந்த நிலையில் நின்று எதையும் அவதானிக்கவோ பார்க்கவோ இல்லை. ஒரு இயல்பான அன்றாடத்தன்மை கொண்ட அராஜகமான அங்கதமே அவருடையது. அவரது குணவியல்பான சவடால் விடுவதை அவர் பிறர் மீது ஏற்றி அதைப் பகடிப் பண்ணினார் என நினைக்கிறேன்.
இலக்கிய எழுத்தாளர்களை அவர் சற்று வெளியில் நின்றுதான் பார்த்தார் என நினைக்கிறேன். தன்னை அந்த குழுவில் ஒருவராக அவர் கருதவில்லை. அவ்வகையில் முழுமையாக அவர் சமூக வலைதளங்கள் வழியாக உருவான எழுத்தாளர். எழுத்தாளர்களுக்கான தீவிர நோக்கு அவசியமில்லை எனக் கருதினாலும் இணையத்தில் வரும் படைப்புகளைப் படித்து ஒருவித பார்வையை உருவாக்கிக் கொண்டார் என நான் அவருடன் தொலைப்பேசியில் ஒருமுறைப் பேசியபோது உணர்ந்தேன். அவரது இலக்கியவாதிகள் மீதான அங்கதம் - குறிப்பாக ஜெயமோகன் மீதான பகடி - அப்படியானதே. ஊர்க்காரர்கள் அவரை எப்படிக் கோட்டோவியமாக்கி இருப்பார்களோ அதே மொழியில் இலக்கிய ஆசான்களைப் பற்றி எழுதினார். முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் உறவினர் என்னிடம் வந்து சொன்னார். ஜெயமோகன் தக்கலையில் பெரிய புத்தகம் ஒன்றை விரித்து வைத்துப் படித்தபடி சாலையில் நடப்பதைப் பார்த்து பேருந்துகள் பயந்து தெறிந்து ஓடுகின்றன, ஒரே ஒரு லாரிக்காரர் மட்டும் போதையில் ஜெயமோகனை நோக்கிப் பாய்ந்து வர தான் அதைத் தடுத்து நிறுத்தியதாகவும் இல்லாவிட்டால் லாரி பப்படமாகப் பொடிந்திருக்கும் இருக்குமென்றும். பிரபு இப்படியாகத்தான் கலாய்த்துக் கொண்டிருந்தார்.
அவர் பயன்படுத்திய குமரி மொழி சற்று நூதனமானது - பொது வாசகர்களுக்காக வெகுவாக மிகைப்படுத்தி நிறைய வசைச்சொற்களை இணைத்துப் பிரத்யேகமாக பகடிக்காக அவரால் உருவாக்கப்பட்டது. சில சொல்லாடல்களையும் வசைகளையும் மீளமீளப் பயன்படுத்தி அவற்றை நகைச்சுவையின் பொருட்டு எதிர்பார்க்கும் நிலையை வாசகர்களிடம் ஏற்படுத்தினார். நகைச்சுவைப் படங்களில் வரும் சென்னைத் தமிழுடன் அதை ஒப்பிடலாம். மைக்கேல் மதன காமராஜனில் கமல் பயன்படுத்திய பாலக்காடு தமிழுடனும் ஒப்பிடலாம். அதனாலே பொதுத்தமிழ் வாசகர்கள் அதை ரசித்தார்கள். அசலான குமரித் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளைப் படித்துப் புரியாமல் போனவர்களுக்கு பிரபுவின் தமிழ் சற்றே சுவாரஸ்யமாகவும் புரியும்படியுமாக ஆனது இப்படித்தான்.
ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்களை நம்மால் வெளியில் இருந்து வகுத்துச் சொல்லிவிட முடியாது. ஆனால் அவருக்கு நீரிழிவு இருந்ததாகவும் அதிகமாகப் பகலிலும் குடித்து வந்ததாகவும் அண்மையில் உடல் எடை குறைந்து விட்டிருந்ததாகவும் சில நண்பர்கள் சொன்னார்கள். ஒருவேளை நாற்பதுகளின் துவக்கத்தில் பெரும்பாலானவர்களுக்கு வரும் இருண்மையும் பரிதவிப்பும் தன்னழிவை நோக்கி அவரைத் தள்ளியிருக்கலாம். இன்னும் சில பத்தாண்டுகளாவது வாழ்ந்திருந்தால் பலரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்திருப்பார்.
பிரபுவின் மரணச் சேதி என்னை நேற்று வெகுவாகப் பாதித்துவிட்டது. தொடர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டும் யோசித்துக் கொண்டும் அவரைப் பற்றி பலரும் எழுதுவதைப் படித்தவாறும் இருந்தேன். தூங்கி எழுந்ததும் ஒரு பெரிய இருட்டு என் மீது படிந்ததான உணர்வு வந்தது. அது ஒரு பெரிய பயம்தான் எனப் புரிகிறது. காலம் கையை விட்டு நழுவிப் போய் விடுமோ, நல்ல உணவு, வெளிச்சம், உரையாடல்கள், வாசிப்பு, எழுத்து தரும் மகிழ்ச்சியை இழந்துவிடுவோமோ எனும் பயம். என்னதான் வாழ்க்கை வதையாக இருந்தாலும் நேர்மறையாகவே அதை உபமனம் சித்தரிக்கிறது. போதும் போதும் என வலி பொறுக்காமல் மனம் கூறினாலும் இன்னும் இன்னும் வேண்டும் என உபமனம் தவிக்கிறது. அதன் குரலை என் பிரக்ஜையின் இரைச்சல் அமிழ்த்தி ஆழத்தில் தள்ளுகிறது. ஒவ்வொரு முறை எதிர்பாரா மறைவொன்று முகத்தில் வந்தறையும்போது நான் என் வாழும் இச்சையை அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்.
பிரபுவுக்கு அஞ்சலி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

மனதுக்குள் நடக்கும் ஆட்டம்

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்றைய இந்தியா நியுசிலாந்து டி20ஐ போட்டியை வெகுவாக ரசித்தேன். முதல் போட்டியில் 225 அடித்தும் வெல்ல முடியவில்லை என்பதை விட நியுசிலாந்தை மற்றொரு விசயம் வெகுவாக வருத்தியது - அவர்களால் பவர் பிளேயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்ஸனும் வேகவீச்சாளர்களை அடிக்கிற பாணி அவர்களை மனதளவில் உலுக்கி எடுத்துவிட்டது. ஆகையால் இரண்டாவது போட்டியின் ஆடுதளத்தை மாற்றினார்கள். கொஞ்சம் நின்று வருகிற ஆடுதளத்தைத் தேர்வு பண்ணினார்கள். இந்தியா ஒரு சுழலருடன் ஆடுவதும் நியுசிலாந்து இரு சுழலர்களுடன் ஆடுவதும் மற்றொரு காரணம். ஆகையால் பவர் பிளேவை ஆதிக்கம் செய்தால் இந்தியாவை 140-150க்குள் சுருட்டலாம். முதலில் மட்டையாடும் பட்சத்தில் தாம் 170-180 அடித்தால் கூடப் போதும். அதை வைத்துத் தடுத்தாடலாம் என நம்பினர். இதே திட்டத்தைத்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் கூட அண்மையில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. 1) அவர்களுடைய வேகவீச்சாளர்கள் ஒரு சிக்ஸர் / பவுண்டரி கொடுத்ததுமே பந்தின் நீளத்தை இழுத்து ஷார்...