தீபாவளி தள்ளுபடி விற்பனையை ஒட்டி தன்னால் கையாள முடியவில்லை என பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் மின்னஞ்சலில் மன்னிப்பு கேட்டது . ஆனால் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருளை ஒழுங்காக நேரத்தை அனுப்பியது . உண்மையில் அவர்களை விட மோசமாய் சொதப்பியது அமேசான் தான் . தீபாவளியை ஒட்டி வந்த ஏகப்பட்ட ஆர்டர்களை அவர்களால் சரியாக கொரியர் பண்ண முடியவில்லை . அமேசானின் பேஸ்புக் பக்கம் புகார்களால் நிரம்பி வழிகிறது . தீபாவளியினால் பணியாளர்கள் விடுமுறையில் போவதும் ஒரு காரணமாக இருக்கலாம் . ஆனால் அதை விட அமேசானுக்கு தனது கொரியர் நிறுவனம் எப்படி எந்நேரம் பொருட்களை கொண்டு சேர்க்கிறது என்பது பற்றி போதுமான தகவல் இல்லை என்பது தான் சிக்கல் . கொரியர் ஆட்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் தருவதோ தொடர்பில் இருப்பதோ இல்லை . வாடிக்கையாளர் சேவை தொடர்பாளரை அழைத்தால் உடனே மன்னிப்பு கேட்டு உறுதி அளிப்பார்கள் . தினமும் கூப்பிட்டாலும் இதோ புலி வரும் புலி வரும் என்பார்கள் . ஆனால் வராது .