முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்த்துக்கள் ஜெயமோகன்

பத்மஸ்ரீ விருதை ஜெயமோகன் மறுத்துள்ளது தர்க்கரீதியான முடிவாக தெரியவில்லை. எதையும் தெளிவாக வலுவாக முன்வைக்கும் அவர் இம்முறை கூறியுள்ள காரணங்கள் பனிமூட்டம் போல் உள்ளன. தன் எதிர்தரப்பின் கண்டனங்களை கண்டு அவர் என்று ஒதுங்கி போயிருக்கிறார்? எதிர்தரப்பை சீண்டுவதும், அதனோடு மோதுவதும் தான் அவரது எழுத்து உத்வேகத்தின் சுனை. அப்படியான ஜெயமோகன் தான் இப்போது தன் பெயர் அல்லது படைப்பின் அங்கீகாரம் களங்கப்படக் கூடாது என்பதற்காக மறுத்துள்ளார். இது அவரது அடிப்படை சுபாவத்துக்கே எதிரானது.

ஒரு சின்ன பூவை பூக்க வைப்போம்

இன்றைய தினம் ஒரு சின்ன பூவை யாருக்கும் தெரியாமல் மலர செய்வோம் ஒரு சின்ன பூ பூப்பது பூமியை பூட்டும் கடவுளின் முறுகிய திருகலாக இருக்கலாம்

பேய்கள் அரசாண்டால்….

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் மெல்ல மெல்ல சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வது எப்படி இருக்கும் என நமக்கு புரிய வந்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அதன் பின்னணியும் இந்த சர்வாதிகார வெறியாட்டத்தின் உச்சம் எனலாம். இதற்கு முந்தைய எந்த அரசும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள், போராளிகள் அனைவரின் கழுத்தையும் சதா சுருக்குக் கயிற்றில் கட்டி வைத்திருக்க முனைந்ததில்லை. இந்த அரசும் அதன் கட்சித் தலைவர்களும் முற்றிய மனநோயாளிகளைப் போல் பாதுகாப்பின்மையின் விளிம்பில் தவிக்கிறார்கள். தமக்கெதிராய் ஒரு சொல், ஒரு அசைவு, ஒரு கருத்து தோன்றினால் போதும் கத்தியை தூக்க, சாட்டையை சொடுக்க, தூக்குக்கயிறை முறுக்க துவங்கி விடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் அரசை விமர்சித்து பேசினார். ஒரு சில நாட்களுக்குள் அப்பேச்சை குறிப்பிட்டு விளக்கம் வேண்டி மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து நிர்வாகத்திற்கு கடிதம் வந்து விட்டது. சமீபமாய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசும் போது மோடியை குஜராத் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி என்று சொன்னேன். உடனே அங்கிருந்த ...

கனவில் வந்த சு.ரா

முந்தா நாள் என் கனவில், வழக்கமாய் நான் அதிகம் திட்டியுள்ள, ஒரு மூத்த எழுத்தாளர் வந்தார். நான் அவரிடம் உருக்கமாய் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கனிவாய் பதிலளித்தார். நேற்று என் கனவில் சுந்தர ராமசாமி இறந்து போன சேதி கேட்டு மனம் உடைந்து துக்கம் கொண்டேன். யாரோ ஒருவரிடம் தாள முடியாத இழப்புணர்வை பகிர்ந்து கொண்டபடி ஒரு பேருந்தில் ஏறி பயணித்தேன். அதன் இருக்கை உருளை வடிவில் சாய்வாய் இருந்தது. அதில் இருந்து விழுந்த விடாதபடி சிரமப்பட்டு தொற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. மீண்டும் மீண்டும் கண்ணீரில் தோய்ந்த நினைவுகளை எனக்குள் தொகுத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் விடிந்து விட்டது. அடச்சே சு.ரா இறந்து தான் பல வருடங்களாயிற்றே என தோன்றியது. இன்றிரவு அடுத்து யார் வரப் போகிறார்களோ என நினைத்து பயமாக இருக்கிறது. பொதுவாக கனவில் வருகிற எதற்கும் நேரடி பொருளில்லை. ஒருவருக்காய் அழுகிறீர்கள் என்றால் அவர் வேறெதற்கோ குறியீடு மட்டும் தான். அவரே அல்ல. நான் எதன் இழப்புக்காய் துக்கித்தேன்? யாருக்காய் விம்மி அழுதேன்? என்ன தான் நடக்கிறது எனக்குள்?

காந்தியும் மாஸ் ஹிஸ்டிரியாவும்

நான் சிறுவயதில் லூயிஸ் பிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை கதையை (Life of Mahatma Gandhi) படிக்கையில் நிறைய இடங்களில் நெகிழ்ந்திருக்கிறேன். சில இடங்களில் அழுதிருக்கிறேன். அதில் என்னை வியப்படைய செய்த இடம் 1947இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் நடந்த கலவரங்கள் பற்றின அத்தியாயம். கல்கத்தாவிலும் பீஹாரிலும் தில்லியிலும் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பிரிவது என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தனி நாட்டை பெற்று செல்வதாய் எளிதாய் இருக்கவில்லை. பஞ்சாப் மற்றும் வங்கத்தின் வளமான பகுதிகள் உடைக்கப்பட்டன. அப்போது இந்திய பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தார்கள். நிலம் என்பது மக்களின் உணர்ச்சிகளோடு மிகவும் அந்தரங்கமாய் பிணைக்கப்பட்டது. நீங்கள் என்னிடம் இருந்து ஐந்து லட்சத்தை திருடினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால் ஐந்து லட்சம் மதிப்புள்ள என் பூர்வீக நிலத்தை பிடுங்கினால் எனக்கு கொலைவெறி தோன்றும். இந்த உளவியல் இன்றும் வேலை செய்கிறது. இன்றும் சாதிய/மத கலவரங்கள் நிலம் சார்ந்ததாய் இருப்பதை காண்கிறோம்.

சென்னையை மீட்பது

  நான் புதிதாய் யாரை சந்தித்தாலும் ரெண்டு கேள்விகளைத் தான் முதலில் கேட்கிறார்கள். எங்கு வேலை செய்கிறீர்கள்? சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா? இந்த இரண்டின் விகிதாச்சாரம் தான் சென்னை வாழ்வின் தரத்தை தீர்மானிக்கிறது.

தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதன் (“ஜன்னல்” இதழில் வெளியான பேட்டி)

கவிஞர் தேவதச்சன் 2015ஆம் வருடத்தின் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருதைப் பெறுகிறார். தேவசதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம். தூத்துக்குடி மாவட்டத்தின் கோயில்பட்டியை சேர்ந்தவர். எழுபதுகளில் இருந்து கவிதை எழுத துவங்கிய தேவதச்சன் இன்றும் ஒரு படைப்பாளியாக உறையில் இருந்து உருவப்பட்ட பளபளப்பான வாளைப் போல ஜொலிக்கிறார். இதற்கு காரணம் எழுபதுகளில் துவங்கி இன்று வரை அவர் யாரைப் போன்றும் எழுத முயலவில்லை; அவரை போல் யாராலும் எழுத முடிந்ததில்லை. தேவதச்சன் இந்த கவிதை வெகுபிரசித்தம். ”துணி துவைத்து துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த துணி எடுத்தேன் காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”