அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை பலாத்காரம் செய்த்தற்காக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் கல்லூரி மாணவிகளின் லெஸ்பியன் பலாத்கார வழக்குகள் : 2005 இல் அமெரிக்காவின் மஸச்சூஸட்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்மித் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி தனது இரு லெஸ்பியன் காதலிகளான ரேச்சல் மற்றும் அகஸ்தாவுடன் அவர்களின் வீட்டுக்கு சென்றார் . படுக்கையறையில் மதுவருந்தி விட்டு மூவரும் உடலுறவில் ஈடுபட்டனர் . ஒரு கட்டத்தில் ரேச்சலும் அகஸ்தாவும் அம்மாணவியை கைவிலங்கிட்டு கட்டிப் போட்டு விட்டு பலாத்காரம் செய்தனர் . சேடோமெஸோக்கிஸ பாணியில் கன்னத்தில் திரும்பத் திரும்ப அறைந்தனர் ; ஒரு பெண் அவளது கால்களை பிடித்துக் கொள்ள இன்னொருவள் அவளது அடிவயிற்றை கத்தியால் கீறியிருக்கிறாள் . இதன் பிறகு டில்டோ கொண்டு பிறப்புறுப்பை துளைத்திருக்கிறார்கள் . இந்த மாணவி பின்னர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்திட , அவர்கள் காவல்துறையினரை அணுக , வழக்கு சீராக நடந்து ரேச்சல் மற்றும் அகஸ்தாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது . இதைப் பற்றி எழுதும் அலெஸ்ஸாண்டிர...