முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இயக்குநர் ராம்

தமிழில் தீவிர சமூகவியல் விவாதங்களை எழுப்பும் படங்களை எடுப்பவர் ராம். தமிழ் தேசியம், நகரமயமாக்கலால் ஒடுக்கப்படும் தனியர்களின், சாமர்த்தியமற்றோரின் உளவியல், குரூரமும் கருணையும் கலந்த பெண்களின் தனித்த உலகம், உலகுடன் ஒத்துப் போக முடியாத வளர்ந்தவர்களின் உருவகம் போலத் தோன்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள், எல்லாரையும் மன்னிக்கிற யாரையும் நசுக்கக் கூடிய இவ்வாழ்க்கையின் குறியீடான இயற்கை, இவற்றுக்கு இவர்களுக்கு இடையிலான மோதலே ராமின் படங்கள்.  யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பார்வையும் திரைமொழியும் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார் ராம். "பராசக்திக்குப்" பிறகு பார்வையாளர்களுடன் நேரடியாக அரசியல் 'பேசுகிற' படங்களை  எடுத்திருக்கிறார். ரஞ்சித்தின் படங்கள் தலித் / பௌத்த அரசியலின் அழகியலை முன்னெடுத்தால் ராமின் படங்கள்  நவமுதலீட்டிய ஏற்றத்தாழ்வான 'வளர்ச்சிக்கு' எதிரான கேள்விகள், விவாதங்கள், கொந்தளிப்புகள் என நீளும் மற்றொரு அரசியலை முன்வைத்தன. நீண்ட காலம் நம் நினைவுகளில், கற்பனையில் தங்கி இருக்கக் கூடிய படங்கள் அவை.  அவருடைய இயக்கத்தில் யார் நடித்தாலும் அற்பு...

கடவுள் என்னை ஆட்கொண்ட கதை

நான் சிறுவயதில் இருந்தே கடவுளைக் கும்பிட்டதில்லை . யாரும் எனக்கு கையைக் குவித்து கடவுளைத் தொழவோ மனமுருகி வேண்டவோ சொல்லவில்லை . எங்களுடைய வீட்டில் ஒரு சிறிய மூலையில் ஒரு கடவுளின் படம் இருக்கும் . அங்கு அம்மா மட்டுமே விளக்கேற்றி வைத்து சில நிமிடங்கள் தொழுவார் . கோயிலுக்குப் போவார் . என் அப்பா ஒரு தீவிர நாத்திகர் . சாகும் வரை அவர் அப்படித்தான் . அவருக்கு புற்றுநோய் வந்த போது கூட அவர் கடவுளை நம்பவில்லை . நான் ஆரம்பம் முதலே அவருடனே இருந்ததால் அம்மா செய்வதெல்லாம் வேடிக்கையாகவே ஒரு கட்டத்தில் தோன்றியது . ஆனால் பகுத்தறிவு சார்ந்து நான் நாத்திகன் ஆகவில்லை . ( வெகுபின்னரே பெரியாரைப் படித்தேன் .) கடவுளுக்கு என் வாழ்க்கையில் இடமே இருக்கவில்லை . எப்படி ஒரு ஆண் பெண்களின் பாத்ரூமுக்குள் போவதில்லையோ அப்படியே நான் கடவுளின் பக்கமும் போனதில்லை .   தமிழ் எழுத்தாளர்களில் கோயில் கலாச்சார பழக்கமே இல்லாத ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன் . எந்தளவுக்கு என்றால் எந்த பண்டிகை , விசேச தினங்கள் பற்றியும் , விரதங்கள் , நம்பி...

ஜான்டி ரோட்ஸ்கள் இனித் தேவையில்லை!

  இன்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரும் தற்போது தமிழ் வர்ணனையாளராக இருப்பவருமான ஶ்ரீதர் "தென்னாப்பிரிக்கா 20 ரன்களையாவது களத்தடுப்பில் சேமிப்பார்கள், ஆகையால் 280 எனும் இலக்கானது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடும் போது 300ஆகிறது" என்று சொன்னார். இது ஒரு காலாவதியாக கருத்து என்று எனக்கு அப்போதே தோன்றியது. ஶ்ரீதர் சொன்னதைப் போல தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் பாய்ந்து விழுந்து உருண்டு புரண்டு களத்தடுப்பு பண்ணினார்கள். நான்கு, மூன்று ஓட்டங்கள் எனத் தடுத்தார்கள். ஆனால் மட்டையாடி விரட்டி சென்ற இந்தியா வெகு சுலபமாக போட்டியில் வென்றது. ஏன் எப்படி? ஶ்ரீதர் சொல்லும் விதி 2010 வரையிலான கிரிக்கெட்டில் மட்டுமே செல்லுபடியானது. இன்று மட்டையாளர்களால் எப்போது வேண்டுமெனிலும் சிக்ஸர் அடிக்க முடியும். அதனால் ஸ்டிரைக் ரேட் பற்றி அவர்கள் துவக்கத்தில் கவலைப்படுவதில்லை. தேவையான ரன் ரேட் 7-8 போனாலும் அது அவர்களை அலட்டுவதில்லை. பந்தை எப்போது வேண்டுமெனிலும் மைதானத்துக்கு வெளியே அடிக்கலாம் எனும் போது களத்தடுப்பாளர்கள் அசகாய சூரர்களாக இ...

வாழ்தலும் கடனும்

எனக்கு மரணத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அது ஒரு மகத்தான சம்பவம் என நினைக்கிறேன். அவ்விதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை நடக்கும் இடத்தை விட துக்க வீட புனிதமானது. இன்னும் சொல்லப் போனால், தனிப்பட்ட துயருக்கு அப்பால், நாம் மரணத்தைக் கொண்டாட வேண்டும். அது ஒரு அதிசயம். அது ஒரு கவிதையின் உச்சத்தைப் போன்ற தருணம். ஒருவர் மரிக்கும் போது காலத்துக்கு அப்பால் போய் விடுகிறார். இந்த உலகில் உயிருள்ளவர்களில் இருந்து உயிரற்ற பொருளான ஒரு கல்லால் கூட காலத்துக்கு அப்பால் இருக்க முடியாது. ஆனால் மரணம் மட்டுமே ஒரு நீர்க்குமிழி உடைவதைப் போல நம்மை காலமற்றவனாக்குகிறது. ஒரு கவிதையை வாசித்து, காதலித்து, புணர்ச்சியின் உச்சத்தில், இருத்தலின் ஒவ்வொரு மகத்தான கணத்திலும் நாம் தற்காலிகமாக அடைகிற ஒன்றை நிரந்தரமாக - அது கூட சரியான சொல் அல்ல, காலமின்மையில் என்ன நிரந்தரம்? சரியாக சொல்வதானால் முழுமையாக - அடைவது மரணத்தின் போது தான். நாம் பிறக்கும் போது காலமின்மையில் இருந்தே காலத்திற்குள் வருகிறோம், அந்த ‘காலக்கடனை’ நாம் வாழ்க்கை பூரா அடைக்க முடியாமல் போகிறது. அந்த காலக்கடனை மரணத்தின் போது திரும்பக் கொடுத்து விட்டுப் ப...