முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என் 'வினோத' ஏக்கங்கள்

நான் கடந்த இரு ஆண்டுகளாக குத்துச்சண்டை பயில்கிறேன். ஆனால் ஒரு அமெச்சூர் கிளப் போட்டியில் என்னால் இத்தனை நாட்களாகப் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் இங்கு சக்கரநாற்காலி குத்துச்சண்டைப் போட்டிகளே இல்லை. கிரிக்கெட், பென்ஸிங் போன்ற மிகச்சில போட்டிகள் மட்டுமே ஆண்டுக்கொரு முறைமுறை அங்கங்கே நடக்கின்றன. பவர் லிப்டிங்கில் கூட நிறைய வாய்ப்புகள் உளன. ஆனால் குத்துச்சண்டைக்கு இடமேயில்லை. நான் இதை இன்று கர்நாடக அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பின் செயலரிடம் விசாரித்து உறுதிசெய்தேன். ஆக நான் வெறுமனே குத்தும்பையில் பயிலலாம், ஸ்பாரிங் பண்ணலாம். ஆனால் ஒருபோட்டி வாய்ப்புகூட கிடைக்காது. நான் நேற்று ஒரு கிளப் அளவிலான போட்டித்தொடரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பக்கம் அப்போட்டிகளைப் பார்க்க ஜாலியாக இருந்தாலும் வெளியே வந்ததும் என்னையும் அவர்களையும் ஒப்பிட்டு மனம் துவண்டுவிட்டது. சுத்தமாகப் பயிற்சியே இல்லாதவர்கள், ஒழுங்காக ஒரு குத்துவிட முடியாதவர்கள் கூட ஆடினார்கள். பத்து வினாடி கூட தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கூட ஆடினார்கள். சுமாராக ஆடுபவர்கள் கூட எதிராளியின் திறமைமையின்மையைக் கொண்டு வென்றார்கள். ஒருவரை நான் ஸ...

ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர்

  நினைவில் இருந்து சொல்கிறேன். தவறாக இருக்க வாய்ப்பு உண்டு. வாசகசாலை அமைப்பையும் அவர்கள் நடத்தும் விமர்சன கூட்டங்களையும் மிக மோசமாக ஜெயமோகன் விமர்சித்து எழுதினார். இன்று அவர்களை விருந்தினர் என்று அழைக்கிறார். வாசகசாலை ஒரு அமைப்பாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது சான்று என எடுக்கலாமா?? - M Muralidhar Balaprakash ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர் ஜெயமோகன் 'வாசக சாலையை' செரித்துக்கொள்கிறார் - பல அரசியல் / வணிக அமைப்புகள் செய்வதுதானே. இந்த சிறிய அமைப்புகளையும் நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர்களுக்கு இத்தகைய செரிப்புகளால் அதிக கவனமும் புத்தக விற்பனையும் கிடைக்கும். நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இது பெரிய விசயம். கடனில் இருப்பவர்களை கொத்தடிமைகளாக பண்ணையங்கள் வாங்கிக்கொள்வதைப் போல இது நிகழ்கிறது. அவர்களுக்குப் பாவம் வேறுவழியில்லை. வாங்கிய திட்டுகளை மறந்து சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். உடனே ஜெயமோகன் வா.சா எவ்வளவு மகத்தான இலக்கிய அமைப்பு என்று நீண்ட கட்டுரையொன்றை எழுதுவார். ஜெயமோகனின் எழுத்தென்பது அவரது மூளையிலிருந்து நேரடியாகப் பாய்வது. அவர் எழுதும்போது மனசாட்சி குறுக்கே வரவே செய்யாது. யாரைக்குறி...

"கொட்டுக்காளி" இயக்குநரிடம் சில கேள்விகள்

"கொட்டுக்காளி" படத்தின் மையச் சேதி இந்த ஒரு வரிதான் - ஆண்கள் எல்லாரும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள், படுபயங்கரமானவர்கள். நாம் இயக்குநரிடம் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வியைத்தான்; அதற்கு அவர் பதிலளிக்கும்வரை பலவிதங்களில் கேட்க வேண்டியுள்ளது - ஐயா, இந்தப் படத்தை எடுத்த நீங்கள் ஆண் அல்லவா? இயக்குநர்: அது வந்துங்க நான் ஆம்பளதான், ஆனால் கெட்ட ஆம்பிளை இல்ல. முற்போக்கு முகாமை சேர்ந்த ஆம்பள. நாங்க அடிப்படையிலே ரொம்ப நல்லவங்க. நம் கேள்வி: ஏன் உங்கள மாதிரி நல்ல ஆண்கள் உங்க படத்தில வரதில்ல? இயக்குநர்: என் படம் கிராமத்துல நடக்குது. அங்க எல்லா ஆம்பளங்களும் இப்படித்தான். நம் கேள்வி: நீங்க கிராமத்தை சேர்ந்தவர் இல்லையா? இயக்குநர்: ஆமாங்க, ஆனா நாங்கல்லாம் படிச்சி சிந்திச்சு வித்தியாசமா நல்லவங்களா இருப்போம்.  நம் கேள்வி: உங்களை மாதிரி ஆம்பளைகளை வச்சு எதிர்காலத்தில படமெடுப்பீங்களா? இயக்குநர்: நாங்க சிறுபான்மையானவங்க. பெரும்பான்மை ஆண்களைப் பத்தி தானே படம் எடுக்க முடியும்? நம் கேள்வி: பெரும்பான்மையின்னா நீங்க அதுக்கு எதாவது ஆய்வு பண்ணியிருக்கீங்களா? புள்ளி விபரம் இருக்குதா? இயக்குநர்...

குழந்தைகள் குறித்த குறிப்புகள் 2 - பெண்களும் குழந்தைகளும்

குழந்தைகள் விசயத்தில் அதிகமாக முட்டாளாக்கப்படுவது பெண்களே . என்னை மிகவும் வியப்படைய வைப்பது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அனேகப் பெண்ணியவாதிகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதோ பெண்களைக் குழந்தைப் பெறவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதோ இல்லை என்பதே ( அரசின்மைவாதியான பெரியார் மட்டுமே விதிவிலக்கு ). ஐரோப்பிய பெண்ணியவாதத்தை எடுத்துக்கொண்டால் ஷுலாமித் பயர்ஸ்டோன் பெண்கள் ஒருநாள் குழந்தைப்பேறை எந்திரங்களிடம் விட்டுவிடவேண்டும் என்று கனவு கண்டார் . சிமன் டி பூவர் தாய்மையின் ‘ பக்தி ’ குறித்து தனது “ இரண்டாம் பாலினம் ” நூலில் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை - தாய்மையின் காரணமாகவே பெண்கள் நிரந்தரமாகத் தம் பௌதீக அடையாளத்தை இழப்பதுடன் , தம்மைக் கடந்து தம் உடலைத் தரிசிக்கும் ஒரு தெய்வீக நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் , இதுவே மிக மோசமான அடிமைத்தனம் என்றும் கூறினார் அவர் . உதாரணமாக , நம்மால் ஒரு தாயின் பாலியல் இச்சையை ஒருபோதும் கருதமுடியாது . பாலியல் பௌதீகமானது என்பதால் பெண்ணைத் தன் பௌதீக உடலைக் கடந்துச் செல்லத் தூண்ட...