இந்நேரம் ஆசானின் ஓய்வறியாத விரல்கள் இவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும்... "சுந்தர ராமசாமியின் இல்லத்தில் வைத்துதான் வேங்கடாசலபதியைச் சந்தித்தேன். கெச்சலான இளைஞர். வரலாறு, பண்பாட்டு நகர்வுகள் குறித்த ஆர்வம் கொண்டவர். சுந்தரராமசாமி மீது அபாரமான பற்றுக் கொண்டவர். பாரதியையும் வ.உ.சியையும் ஆய்வுபூர்வமாக விரிவாக தமிழுக்கு அறிமுகப்படுத்தும் துடிப்பு இருந்தது. கல்விப்புல கண்ணோட்டம் கொண்ட கூர்மையான மன அமைப்பு. என்னைப் பார்த்ததும் நீண்ட நேரமாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார் ... வேங்கடாசலபதி தமிழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாலும் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. நானே அவரது எழுத்துக்கான தடத்தை வரைந்தளித்து திசையையும் உருவாக்கினேன். நான் தான் அவரைப் பற்றி பலரிடம் எடுத்துச் சொல்லி பல இடங்களிலும் எழுதி அவருக்கான இடத்தை அமைத்துக்கொடுத்தேன். ... அண்மையில் சாகித்ய அகாடெமியின் விருதுக்குழுவின் இறுதிக் கட்ட பரிசீலனையில் வந்த பெயர்களில் பொருட்படுத்தத்தகாத ஒருவருக்கு விருதைக் கொடுத்த சிலர் தவறான வழியில் முயன்றுகொண்டிருப்பதாக தகவல் வந்தது. தமிழின் முக்கிய விமர்சகரும் படைப்பாளியுமா...