அம்மா வருகையை ஒட்டி குவிந்திருந்த கரைவேட்டிகளில் சிலர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்குள் கழிப்பறை பயன்படுத்த வந்திருந்ததை பார்த்தேன். கூட இருந்த ஒருவர் கட்சிக்காரர்களின் வாகங்களை பார்க் செய்வதற்கும் இன்று நூலக வளாகத்தைதான் பயன்படுத்தினார்கள் என்றார். முன்பு நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ஜெயலலிதா முயன்றதை ஒட்டி நடந்த சர்ச்சையில் சாரு தமிழகத்துக்கு நூலகங்களை விட கழிப்பறைகளே அதிகம் தேவை எனக் கூறியது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிமுக கரைவேட்டிகளை மிக நன்றாய் புரிந்து கொண்டவர் சாரு.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்