முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேடுகெட்ட மாநிலம்

 மாவட்ட ஆட்சியருடன் சமரசம் பண்ணி அவரை புகார் அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது தலைமைச் செயலரும் அமைச்சர்களும் என ஒரு சேதி ஒரு பக்கம் இருக்க, சாட்டை துரைமுருகன் இன்னொரு பக்கம் தன் பேட்டியில் இப்படி ஒன்றைச் சொல்கிறார்: எம்.எல்.ஏ அருள் விக்னேஷை ஆட்சியரிடம் மன்னிப்புக் கேட்க வைப்பதாகவும், பதிலுக்கு ஆட்சியர் அருள் விக்னேஷ் தவறு செய்யவில்லை, அவர் நல்லவர்தான் என ஊடகங்களிடம் தெரிவிக்கும்படி ஆட்சியருக்கு அழுத்தம் தரப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பு முதல்வர் 'விஜய் முன்னிலையில்' நடந்ததாகவும் சட்டை சொல்கிறார். இது புரளியாகவே இருக்க வேண்டும். ஒருவேளை இது உண்மையெனில் தமிழ்நாடு இந்தியாவிலேயே ஆகக் கேடுகெட்ட மாநிலமாகி விட்டதெனப் பொருள்.

சாட்டை சொன்னது புரளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
பி.கு: நம் அரசியலமைப்பில் எதாவது ஒரு மாற்றம் கொண்டு வந்து தவெகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என இரு கூறாகத் தமிழ்நாட்டைப் பிரிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இவர்களுக்குப் போய் வாக்களித்த மக்கள் இருக்கிறார்களே என நினைத்தால் ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது.

(26 நவம்பர் 2026இல் என் பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...

அசிரத்தையின் காலம்

  நாம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களைத் தேர்வு பண்ணும்போது அதன் உட்கட்டமைப்பையும் செழிப்பையும் பிரதானமாகக் கருதுகிறோம். அடுத்து வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பதையும். அங்குள்ள ஆசிரியர்கள் எந்தளவுக்கு தீவிரத்துடன் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அந்த விசயம்தாம் அவர்கள் செலுத்தும் கட்டணம் வீணாகுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். என்னிடம் ஒரு மாணவர் வந்தார். அவர் எந்த வாக்கியத்தை எழுதினாலும் அது தாறுமாறாகத்தான் இருக்கும். இலக்கணப் பிழைகள் போக சொற்பிழைகள் மலிந்திருக்கும். ஒட்டுமொத்த வாக்கியமும் கேரம் போர்டில் காயின்கள் சிதறிக் கிடப்பதைப் போலத்தான் இருக்கும். அவரது தாயிடம் பேசும்போது அவர் தான் சொந்தமாக ஒரு பள்ளியை நடத்துவதாகவும் அங்குதான் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன் மகன் படித்ததாகவும் அவரது மொழிப் போதாமையைக் குறித்து ஆசிரியர்கள் புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றும் இதுவரை அதைச் சரிசெய்ய முடியாது என்றார். மொழி அறிவானது இயல்பாகவே எல்லாருக்குள்ளும் உள்ளது என்பதால் அதைச் சரிசெய்வது சுலபம் என்பது என் நம்பிக்கை. ஆகையால் அவர் சொன்னது எனக்கு வினோதம...