முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கருணை போலியானதா?

கண் தெரியாத ஒருவரிடம் சென்று “ஐயய்யோ எவ்வளவு பாவம் நீங்க. எவ்வளவு கஷ்டம் உங்க வாழ்க்கை” என்று சொல்லிப் பாருங்கள். அவர் கடுப்பாகி விடுவார். எனக்கு உங்கள் கருணையெல்லாம் தேவையில்லை என்பார். ”குக்கூ” படத்தை ”பார்த்த” என் நான்கைந்து பார்வையற்ற நண்பர்களாவது அதை கடுமையாய் பரிகாசம் செய்து பார்த்திருக்கிறேன். சரி, நான் இதை கருணை காட்டுகிறவரின் பக்கம் இருந்து பார்க்க விரும்புகிறேன்.

கத்தியுடன் திரிபவர்கள்

என் அப்பா ஒரு பேனா கத்தி வைத்திருந்தார். அடர்சிவப்பு பிடி கொண்டது. அதை கையில் வைத்து உருட்டும் போது அதன் இதமான குளிர்மை, கனம், அதன் உறுத்தலான கூர்முனை, மூடும் போது சட்டென வெட்கத்தில் சேலை தலைப்பில் பதுங்கும் முகம் போல் அது மறைவது என அந்த கத்தி மீது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஒரு தனிக்காதல். என் அப்பா அதை பெரும்பாலும் காய்கறி நறுக்கத் தான் பயன்படுத்திய ஞாபகம். எனக்கு அது போல் ஒரு பேனா கத்தி வாங்க வேண்டும் என ஆசை.

நல்லவர்கள் வாழ்க

இன்று காலையில் என்னுடைய ஸ்கூட்டரை சர்வீஸ் விடுவதற்காய் ஹோண்டா ஷோரூம் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணிக்கே தந்து விடுவதாய் சொன்னார்கள். இரண்டு மணியுடன் மூடி விடுவார்கள். இடையில் உள்ள இரண்டு மணிநேரங்களை என்ன பண்ண எனத் தெரியவில்லை. வீட்டுக்கு போகலாம் என்றால் ஆட்டோ கட்டணமே இருநூறு ரூபாய்க்கு மேல் தீட்டி விடுவார்கள். அது மட்டுமல்லாமல் மூன்று மாடிகள் இந்த வெக்கையில் ஏற வேண்டும்; இறங்க வேண்டும். பக்கத்திலே இருந்தது பீனிக்ஸ் மால். ஏஸியில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து வண்டியை எடுக்கலாம் என யோசித்தேன். ஒரு ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டேன்.

எடிட்டரின் பாராட்டு

நேற்று குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்: “உங்கள் ஸ்டைல் நன்றாக உள்ளது. நல்ல வரவேற்பு”. அதைப் படிக்க மிகவும் உற்சாகமாய் இருந்தது. எடிட்டர்கள் சுலபத்தில் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் சந்தேகக் கண் கொண்ட மனைவியைப் போல. அதனால் தான் எனக்கு எடிட்டர்களின் பாராட்டுச் சொற்கள் தனி மகிழ்ச்சி தரும். நான் இதுவரை இலக்கிய பத்திரிகைகளில் மட்டுமே எழுதி வந்திருக்கிறேன். அதனால் வணிக பத்திரிகை ஆசிரியர்களுக்கு இலக்கிய ரம்பத்தால் அறுத்து விடுவானோ என பயமாய் இருக்கும். “ரொம்ப இலக்கியத்தனமா எழுதாதீங்க” என கையை அழுத்தமாய் குலுக்கி சொல்வார்கள். ஆனால் ப்ரியா கல்யாணராமன் ”கிரிக்கெட்டோகிராஃபியில்” என்னை சுதந்திரமாய் எழுத அனுமதித்தார். முதல் சில கட்டுரைகள் தவிர என் மொழியை திருத்தாமலே பிரசுத்தார்கள். என் மொழி ஒரு வணிக பத்திரிகையிலும் உறுத்தாமல் உள்ளது என்பதில் திருப்தி. ப்ரியா கல்யாணராமனுக்கு என் நன்றிகள்.

ஆப்பிளும் மார்புகளும்

Dear Abilash sir.  "Kadavul Irukiraraa" is a nice article in Uyirmmai. May god bless you. The bible says it is tree and we say it is a apple tree. I hope u know this. Kindly make a note of it. Regards jerin நன்றி ஜெரின். ஒரு சின்ன விளக்கம். நீங்கள் சொல்வது சரி தான். அது fig மரம் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் என் கேள்வி இது: விவிலியம் மனிதனால் எழுதப்பட்டது. அது நூற்றாண்டுகளாய் பல சேர்க்கைகளை பெற்று வளர்ந்துள்ளது, மாறி உள்ளது. இன்றுள்ள விவிலியம் மக்கள் தமக்காய் தாமே எழுதிக் கொண்டது. இங்கு தான் ஆப்பிளும் வருகிறது. ஆப்பிள் ஒரு பிரமாதமான குறியீடு. அதன் சிவப்பும் வழவழவென்ற உருளை வடிவமும் காமத்தின் குறியீடு. ஆபத்தின, அழகின் குறியீடு. அதன் வழியே தான அது் பாவத்தின், விலக்கப்பட்ட செயலின் குறியீடும் ஆகிறது. அதனால் தான் தமிழில் ஏவாள் கடித்தது ஆப்பிள் எனும் எண்ணம் எழுத்தாளர்களிடம் குறிப்பாய் பரவலாய் உள்ளது. வெறும் விலக்கப்பட்ட கனி என்பதை விட ஆப்பிள் எனும் போது ஏற்படும் அகச்சித்திரமும் உணர்வுகளும் தனித்துவமானவை. தகவலின் சரித்தன்மையா மொழியின் குறியீட்டுத்தன்மையா? எது ...

நிஜமாவா சொல்றே?

நான் மூன்று மாதங்கள் முன்பிருந்தே என்னளவில் இந்த தேர்தல் சார்ந்து மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என அறிய முயன்று வருகிறேன். எந்த ஊருக்கு போனாலும் எல்லா தரப்பு மக்களிடமும் விசாரிப்பேன். அப்போது அவர்களின் நிலைப்பாடு குளிர்பிரதேசத்தின் ஒரு பனிமூட்டமான விடிகாலைப் பொழுது போல் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் நெருங்கி இதோ அதன் மூச்சு நம் கழுத்தில் நெருடுகிறது. இப்போது மக்கள் தெளிவாய் தன் கோபங்களையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்துகிறார்கள்.

விமர்சனத்தின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்

சி. சரவணகார்த்திகேயன் தனது இணையதளத்தில் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு எழுதியுள்ள மதிப்புரை இது. சரவணகார்த்திகேயனின் மொழி அழகானது. விரிவான வாசிப்பு பின்புலம் அவரது அலசலுக்கு பெரும் வலு. அவரது பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்: ஆர் . அபிலாஷ்   எழுதிய‌ ' கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் ' நாவலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன் . எனக்கு மிகப் பிடித்திருக்கிறது . நல்ல‌ வாசிப்பின்பம் கொண்ட எழுத்து . பொருட்படுத்ததக்க சீரியஸ் உள்ளடக்கம் கொண்டது என்றாலும் துப்பறியும் நாவல் என்பதற்கு நியாயம் செய்யும் வகையிலான‌ சுவாரஸ்யமான‌ ஆக்கம் . 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு , 2014 சென்னை மென்பொருள் ஊழியை கொலை வழக்கு , ( நாவல் வந்த பின் சமீபத்தில் நிகழ்ந்த ஜிஷா கொலை வழக்கும் கூட‌ ) என நிஜ சம்பவங்களின் வலுவான சாயைகள் இப்புதினத்தில் இடம் பெறுகின்றன . சில திரைப்படங்களின் வாசனை கூட மனதில் நிழலாடியது - அமீர் கான் நடித்த‌ 'Talaash' மற்றும் மிஷ்கினின் ' யுத்தம் செய் '.