முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சர்வாதிகாரத்தை எப்படி எதிர்கொள்வது?

காங்கிரஸைப் போல் அல்லாத, பாஜக ஒரு சித்தாந்த ரீதியான கட்சி. அவர்கள் நம்புவதை நிறைவேற்றவே பிரதானமாக ஆட்சிக்கு வருகிறார்கள் (அதிகார, பண வெறியும் உண்டெனினும் அவர்களுடைய செயல்பாடுகளை அதிகம் தீர்மானிப்பது லட்சியம் தான்.) ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மையான இடங்களை நாம் அளித்து ஆட்சிக்கு கொண்டு வந்ததும் அத்தனை பேரும் இந்துத்துவர்கள் ஆகி விடுவதில்லை. இரண்டாம் முறை அவர்கள் ஆட்சிக்கு வந்து தம் அதிகாரப் பரவலை வெளிப்படையாகக் காட்டும் போது, சர்வாதிகாரத்தின் அக்டோபஸ் கரங்கள் பொதுமக்களின் வாசல் வரை நீளும் போது, மக்கள் ஒரு பிரதமரை ஒரு கடவுளைப் போல வழிபடுவதை ஊடகங்கள், நீதித்துறை உள்ளிட்ட அத்துணை நிறுவனங்களும் ஊக்குவிக்கும் போது மக்கள் ஒரு ஜெராக்ஸ் மெஷினைப் போல தம்மை தொடர்ந்து ஆள்பவரின் சாயலில் பிரதியெடுத்துக் கொள்கிறார்கள். இப்படியான அரசியல் அலையுடன் ஒப்பிடத்தக்க மற்றொன்று பக்தி. எனக்குத் தெரிந்த ஏகப்பட்ட பக்தர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாத்திகம் பேசுகிறவர்கள் கூட குடும்பத்திலோ நண்பர் குழாமிலோ கோயிலுக்கு சென்றால் கூட செல்ல தயங்க மாட்டார்கள். குடும்பம் என்பது ஒரு அடி...

ராஜ மௌலி, சங்கரை மூக்கில் விரல் வைக்க செய்த பாஜக

நேற்றைய நாளை என்னுடன் வாழ்வின் மிக மோசமான நாட்களில் ஒன்று என்பேன் . சீக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி இப்படி கண்முன்னால் சீரழிவதை , அதை சங்கிகள் கொண்டாடுவதை , அவர்களுடைய டி . வி சேனல்களில் நெறியாளர்கள் ஒரு குஷியுடன் “ பாருங்கள் பாருங்கள் , என்னென்ன செய்கிறார்கள் , போராட்டம் கலவரமாவதைப் பாருங்கள் ” எனக் கூவுவதைப் பார்க்க சகிக்கவில்லை . ஆனால் ஒன்று மட்டும் உறுத்தியது - இதுவரை சீராக பொறுமையாக போராடியவர்கள் குதிரை மீது வேஷம் அணிந்து அமர்ந்து கையில் வாளுடன் வருவதை , அவர்களை போலிசார் அமைதியாக அனுமதிப்பதை , சிலர் டிராக்டர்களை போலிசார் மீது மோத வருவதைப் போல செலுத்துவதை , செங்கோட்டைக்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்தில் ஒருவன் ஏறி சீக்கிய கொடியை ஏற்றி கொக்கரிப்பதை பார்க்கையில் இவற்றில் , இந்த அப்பட்டமான அராஜக செயல்கலில் இதுவரை நாம் பார்த்த விவசாயிகளின் தோரணை , உடல்மொழி , கண்ணியம் இல்லை . இது வேறொரு கூட்டம் . இவர்களை எப்படி தலைநகரின் மையம் வரை வந்தார்கள் ? ஏன் தலைநகரில் போலிசார் மிக மிக குறைவாக நிறுத்தப்பட்டிர...

ஜல்லிக்கட்டில் இருந்து வேளாண் சட்ட போராட்டங்கள் வரை

ஒரு போராட்டத்துக்கு, பேரணிக்கு அரசு அனுமதி தருகிறது, அரசு பணிந்து போகிறது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் போராளிகள் அங்கே சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் இதை ஜல்லிக்கட்டின் போது பார்த்தோம். அதுவே வேளாண் போராட்டங்களின் போது மீண்டும் நிகழ்கிறது. தில்லிக்கு முன்னேறி சென்று பேரணி நடத்துவதே ஒரு மோசமான திட்டம் தான். அதுவும் அப்பேரணியை போலிசார் தடுக்காமல் தள்ளி நின்று, போராளிகளில் சிலர் சீக்கிய கொடியை ஏற்ற விட்டு விட்டு, ஏற்கனவே இப்படித்தான் திரைக்கதை இருக்கும் என தெரிந்து கொண்டு தலைப்புகளுடன், வசனங்களுடன் தயாராக இருந்த டைம்ஸ் நவ் போன்ற சேனல்களின் துணையுடன் விவசாயிகளை கலவரக்காரர்களாக சித்தரித்து இப்போது போலீசை வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைத்து வேட்டைக்காரன் காத்திருப்பது போல ஜியின் அரசு குடியரசு தினத்தன்று காத்திருந்து தன் வேட்டையை நிகழ்த்தி விட்டது.  செங்கோட்டைக்கு சீக்கிய கொடியுடன் அல்ல, தேசியக் கொடியுடன் சென்றிருக்க வேண்டும். தலைநகரம் முழுக்க விவசாயிகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து அதை கம்பத்தில் ஏற்றியிருந்தால் அரசு திகைத்து போயி...

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா?

மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக் கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்ல்பெக்கின்  Submission  நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதையடுத்து வெய்ல்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் வெய்ல்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை எனச் சுட்டத்தான். பொதுவாக தமிழ்ப் புனைவுகள் சில பத்தாண்டுகளுக்கோ ஒரு நூற்றாண்டுக்கோ பின்னால் சென்று ஒரு கதையை மீளுருவாக்கம் பண்ணும் (ஈழப்போர் / புலம்பெயர் இலக்கியத்தில்கூட அநேகமாய் இதுவே நடந்தது). அது வரலாறாகவோ சுய அனுபவக் கதையாகவோ இருக்கும். சமகாலத்தை நாம் எழுதும் போதுகூட அது தனிமனித அல்லல்களைத் தாண்டி சமூக நகர்வுகளை, அரசியல் கலாச்சார சிடுக்குகளைப் பரிசீலிப்பதில்லை என்பது பரவலாக வைக்கப்படும் புகார். இது ஏன்?   (மேலும் படிக்க) https://tamizhini.in/2021/01/25...

பருண்மையின் அரசியல், நாகார்ஜுனரின் அரசியல்

வணக்கம், அபிலாஷ் சார்.  நாகார்ஜுனரின் சூன்யவாதம் பற்றிய உங்களது பதிவுகளை படிக்க / கேட்கத்  துவங்கிய பின், எனக்குள் எழுந்த எண்ணம்:  பருப் பொருட்களில் (matter - wave) சாராம்சம் இருப்பதை தவிர்க்க இயலாது;  நாம் ஒன்றைப் பற்றி சிந்தித்து, அதன் மூலம் நாம் வாழும் உலகில், நாம் காணும், உணர்பவற்றில், இல்லாத சாராம்சத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு அல்லது அவற்றில் சாராம்சத்தை  ஏற்றுவதால், உருவாக்கும் / உருவாகும்  பிரச்சனைகள் தான் உண்மையான, நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்;  இது பற்றிய ஒரு தெளிவான,  நுண்ணிய புரிதல் இருப்பின், அதனை செயல்படுத்தும் போது, தனி மனித வாழ்க்கை சிக்கல்களற்று எளிமையாகும் அல்லவா? நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.  நன்றி. ராதாகிருஷ்ண பட் வணக்கம் ராதாகிருஷ்ண பட் பருப்பொருட்களின் பருண்மையை நாகார்ஜுனர் மறுப்பதில்லை. உதாரணமாக ஆற்றில் ஓடும் நீர் நீராக இருப்பதன் வேதியல் கூட்டுப்பொருட்களை அவர் ஏற்கிறார். அவற்றையும், புவியீர்ப்பு விசையையும், காற்றின் போக்கையையும் சேர்த்து உடனடி நிலை என்கிறார். ஆனால் இந்த பருண்மையானது சாராம்சமாக த...

விபத்து நடக்கிறதா நடத்தப்படுகிறதா? நாகார்ஜுனர் சொல்வதென்ன?

தற்செயல் நிகழ்வுகளில், efficient conditions நம்மால் அறியமுடியாத அளவில் உள்ளது என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, ஒருவர் பைக் கில் மோதி விடுகிறார். இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க கவனமாக செல்கிறோம். இருந்தும் நம் கை மீறி நடக்கிறது.  இதேபோல் நான் வீட்டிற்குள் நடக்கும் பட்சத்தில் தற்செயலாக நாற்காலியில் காலை இடித்து கொண்டால் 4 நிலைகளின் சாராம்சம் என்னளவில் விடுபடாமல் இருக்கும் அல்லவா? Efficient condition நான் நடந்த வேகமும் நாற்காலியின் weight ஆக இருக்கும். ஆகவே, தற்செயல் நிகழ்வில் efficient conditon அறியமுடியாத அளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நாற்காலி உதாரணம் primary condition ஆ? - Habib Haadi அன்புள்ள ஹபீப் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு விபத்தில் மட்டுமல்ல எந்த ஒரு தற்செயலான நிகழ்விலும் செயலூக்க நிலை (efficient condition) என்னவாக இருக்கிறது என நாம் யோசித்தே ஆக வேண்டும். ஒரு நேர்முகத்துக்கு சென்று சிறப்பாக தேர்வெழுதி, பேசி விட்டு வருகிறோம், ஆனால் வேலை கிடைக்கவில்லை. கவனமாக இருக்கிறோம், ஆனால் கொரோனா வந்து விடுகிறது. நாம் ஓட்டளிக்காவிடினும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கட்சி ஆட்சி...

தடம் மாறுகிறதா போராட்டம்?

விவசாயிகள் பாதிக்கப்பட்டோரின் இடத்தில் இருக்கும் வரை மட்டுமே அவர்களின் போராட்டம் வெல்லும். ஆனால் குடியரசு தினத்தன்று விதிகளௌ மீறி செங்கோட்டை வரை சென்று அங்கு தம் கொடி ஏற்றி, காவல்துறையுடன் மோதி உள்ளது விவசாயிகள் போராட்டம் தடம் மாறுவதையே காட்டுகிறது. வெற்றி வெகு அருகில் இருக்கையில் இப்படி கட்டுப்பாடற்ற போராட்டத்தில் ஈடுபடுவது மத்திய அரசையே வலுப்படுத்தும். இது நிகழ வேண்டுமென்றே ஜியின் அரசு போலீசாரை சற்று விட்டுப்பிடிக்க சொல்லியிருக்கக் கூடும்!