முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மணிரத்னம் - உணர்வு மொழியில் இருந்து தன்னையே 'வெளியேற்றியவர்'

மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒர...

ஆன்லைன் நாவல் வகுப்பு

 

துன்பியலை எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்

  தன் பிரச்சனையை (துன்பியல் வழுவை) உணர்ந்து சரியான நேரத்தில் நாயகனோ நாயகியோ தன்னை மீட்டுவிட்டால் அது கதையை பலவீனமாக்கி விடும் என்று அரிஸ்டாட்டில் தன் “கவிதையியல்” நூலில் ஓரிடத்தில் சொல்லுகிறார். இது உண்மையா? எல்லா நாயகர்களும் மீளமுடியாதபடி வீழ்ந்து தான் ஆக வேண்டுமா? இது தான் எதார்த்த உலகில் நடக்கிறதா? இல்லையே! இங்கு தான் அரிஸ்டாட்டில் கதையை வாழ்க்கையை போலச்செய்தல், ஆனால் வாழ்க்கை அல்ல என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும். கதை வாழ்க்கையை விட வசீகரமானது, சுவாரஸ்யமானது (நான் வாழப்படும் வாழ்க்கையை சொல்லுகிறேன், கதையாக மீளநினைக்கப்படும் வாழ்க்கையை அல்ல.) அதனாலே சரியான நியாயங்கள் இல்லாமல் திடீர் திருப்பமொன்றின் மூலம் ஒரு பாத்திரம் மீட்கப்படுமானால் அது கதையின் தீவிரத்தை மழுங்கடித்து விடும், கதையின் அமைப்பே பாத்திரங்கள் போக்கை தீர்மானிக்க வேண்டும், பார்வையாளர்களுடைய (வாசகர்கள்), எழுத்தாளனுடைய விருப்பம் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். தல்ஸ்தாயின் “அன்னா கரெனினா” நாவலில் வரும் இரு முக்கிய பாத்திரங்களான லெவின் மற்றும் கிற்றி (Levin, Kitty) இதற்கு சிறந்த உதாரணங்கள். தங்களுடைய மிகையான கற்பன...

குற்றவிசாரணைப் பிரச்சாரம்

  நாங்கள் டீக்கடையில் இருந்தோம். விஜய்க்கும் போதை மருந்து குழுவுக்குமான தொடர்பு, அவரது வீட்டில் நடக்கும் விருந்துகள் குறித்த செய்திகளை ஆளுங்கட்சி சார்பு யுடியூபர்களும் பத்திரிகையாளர்கள் ஏன் கசிய விடுகிறார்கள் என நண்பர் ஒருவர் கேட்டார். அப்போது எங்கள் உரையாடலைக் கேட்ட டீ மாஸ்டர் சொன்னார், "அவரைப் பார்த்து ஆளும் அரசு பயப்படுகிறது". அவர் ஒரு விஜய் அண்ணா விசிறி. ஆனால் எனக்கு இது விஜய் மீதான அரசியல் வன்மத்தில் நடக்கிறது என நினைக்கவில்லை. மாறாக, திமுக அரசு விஜய் மீது கைவைக்காது என்றே நினைக்கிறேன். வரும் தேர்தலில் அவருக்கு பாஜக கொடுத்துள்ள அசைன்மெண்ட் திமுக அரசை ஊழல் அரசு எனக் கடுமையாக விமர்சிப்பது. அதை சற்று விஜய் இனி மட்டுப்படுத்துவார். ஒரு பக்கம் பாஜகவின் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் இவர்களின் போதை ஒழிப்பு நடவடிக்கை. அமலாக்கத்துறை நடவடிக்கையை விட இது விஜய்யின் பிம்பத்தை மோசமாகப் பாதிக்கும். ஆகையால் இந்தப் பிரச்சினையை இவர்களுடன் இத்துடன் விட்டுவிடுவார்கள், அவரும் தம் கூரம்புகளை மலரம்புகளாக மாற்றிக்கொள்ளும்படி தனக்கு பிரச்சார உரை எழுதும் உதவியாளர்களிடம் சொல்வார். திமுக அரசு எதிரண...

ஜி.நாகராஜனும் நாவல் வடிவமும்

  ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாளை” நாவலின் எதிர்-நாயகனான கந்தன் வழக்கமான ஜி.நாகராஜனின் பாத்திரங்களைப் போன்று எந்த உயர்பண்புகளிலும் நம்பிக்கை வைக்காதவன் என்றாலும் அவனுடைய உறுதி, துணிச்சல், வாழ்க்கை மீதான அலட்சியம் நமக்கு ஒருவித மரியாதையை அவன் மீது ஏற்படுத்துகிறது. ஜி. நாகராஜனின் பாத்திரங்களில் உள்ள இருத்தலிய தன்மை காரணமாக அவர்கள் காலத்துடனே மோதுகிறவர்கள் என்பதால் துன்பியல் வழு (சமூகத்தின் தாம் எதிர்திசையில் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளை அறியாத பாசாங்கற்ற குணம்) அறிந்தேற்றல் சாத்தியமாவதில்லை. எஸ்.ராவின் “உறுபசி” நாவலின் சம்பத் இதே போல அறிந்தேற்றல் சாத்தியப்படாத ஒரு துன்பியல் நாயகன் எனலாம். ஜெ.ஜெயின் லட்சிய சிறகுகளை உதிர்த்த, ஜி.நாகராஜனின் பாத்திரங்களின் சாயலில் தோன்றிய ஒரு பலவீனமான ‘தேவனைப்’ போல இந்த சம்பத் இருக்கிறான். லட்சிய சாயல்களை அண்ட விடாத சாமான்யத்தின் பல பரிமாணங்களை இருத்தலியல் கோணத்தில் சித்தரித்த அசோகமித்திரனின் நாயக, நாயகி பாத்திரங்களும் கூட அரிஸ்டாட்டிலின் துன்பியல் நாயக வகைமைக்குள் வருகிறவர்கள் என்பதே ஆச்சரியம். “தண்ணீர்” நாவலின் ஜமுனா விழுமியங்களும், நம்பிக்கைகளு...

தங்கிலிஷின் தத்துவப் பிரச்சினை

தங்கிலிஷ் பயன்பாடு குறித்த நீயா நானா விவாதத்தைப் பார்த்தேன். நல்ல விவாதம் - தங்கிலிஷில் எழுதப்படுவதால் தமிழ் லிபியின் புழக்கம் குறைவதாகவும் அழிவதாகவோ கருதும் முன்பு நாம் இருபதாண்டுகளுக்கு முன்பு நாம் அதிகமாக இந்த லிபியைப் பரவலாகப் பயன்படுத்தியதாகக் கூற வேண்டும். அது உண்மையா? இல்லை. முதலில், 90கள் வரைக்கும் தினசரி நாம் தமிழில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகமாக எழுதிக் கொண்டிருந்தோமா? இல்லை. நாம் (வெகுமக்கள்) உச்சபட்சமாக எழுத்து மொழியைப் பயன்படுத்தியது கடிதங்களின்போதே. ஏனெனில் மொழியின் ஜீவநாடி பேச்சிலே உள்ளது. மக்கள் தமிழில் பேசுவதைக் குறைக்கும்போதே நாம் அஞ்ச வேண்டும். எழுதுவதைக் குறைக்கும்போதல்ல. அடுத்து, கடந்த இருபதாண்டுகளில்தாம் நாம் அதிகமாக 'எழுதத்' தொடங்கியுள்ளோம். திறன்பேசியும் சமூகவலைதளமும் நம்மை இன்று மிக அதிகமாக எழுத வைக்கின்றன. தமிழில் பரவலாக எல்லாரும் எழுதுவதில்லை. சில ஆயிரம் பேர்களே எழுதுகிறோம். சில லட்சம் பேர்கள் படிக்கிறோம். 1-2%தாம். ஆகப் பரவலாக தமிழில் வாசிக்கவோ எழுதவோ நம்மால் முடியாமல் போவதே நெருக்கடி. நான் கவனித்தவரையில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆங்கிலத்தில்கூட சரிவர...

நிகழாமையின் குழப்பம்

எனக்கு கடந்த புதன் கிழமை “பல்லைக் பிடுங்கினார்கள்”. ஆங்கிலத்தில் extraction என்று நளினமான அறிவியல்தனமாக அழைத்தாலும் அது நிஜத்தில் பிடுங்குவதுதான் என்பதை ‘உணர்ந்தேன்’. மருத்துவர் என் பல்லைக் கிடுக்கியால் பற்றி இழுத்தபோது இவர் ஏன் இழுக்கிறார் என வியந்தேன். அதன்பிறகு அதை அங்குமிங்குமாக அசைத்து ‘உடைத்தார்’. ஆம், நல்லவேளையாக அதற்கு முன்பு வலிமரப்பு ஊசியைப் போட்டார். நமக்குள் எதையோ உடைத்துப் பிடுங்கி எடுப்பதன் பயம் இருக்கிறதே அது தனியானது. எனக்குத் துளிகூட வலிக்கவில்லை, ஒரு சிறு கூச்சம், கண்ணை இறுக்க மூடவைக்கிற எலும்பு வலியைப் போல ஒன்று அவ்வப்போது இருந்தது என்றாலும், முறுகிக் கொள்கிற என் முஷ்டியைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருந்தது. எங்கே என் பிரக்ஞையை மீறி அவரது மூக்கைக் குத்திவிடுவேனோ என பயமாக இருந்தது. ம்ம்ம்ம் என உறுமியபடி அதைக் கடந்தேன். சுவற்றில் ஆணியைப் பிடுங்குவதைப் போன்ற இச்செயலைச் செய்ய மருத்துவருக்கு அநாயசமான மனநிலையும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும். பார்த்து பதவிசாகச் செய்பவர்களால் முடியாது. அது மனித உடம்பல்ல, அது ஒரு இடிபாடு, அதற்குள் நீண்டிருக்கும் மரத்தை சுத்தியா...