Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் நாம் கிறித்துவர், இஸ்லாமியரை விமர்சிப்பதில்லை?

அடிக்கடி இந்துத்துவர்கள் கேட்கிற கேள்வி: “மதசார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இந்துக்களை விமர்சிப்பது போல நீங்கள் தைரியமாய் பிற மதத்தவரை விமர்சிக்க முடியுமா?”. பெருமாள் முருகன் சர்ச்சையிலும் அதையே கேட்கிறார்கள்.


பதில்: ஒரு மதசார்பற்றவர் இந்து மதத்தை விமர்சிக்கையிலும் இந்து மதத்தின் சார்பில் நின்றே விமர்சிக்கிறார். என்ன தான் மதசார்பற்றவர் என்றாலும் அவர் இந்து மதத்திற்கு வெளியே போவதில்லை. இதை ஒரு சுய மத விமர்சனமாகவே கொள்ள வேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பிற மதத்தவரை அவ்வாறு எந்த சார்பில் நின்று விமர்சிப்பது? மத சார்பற்றவர்கள் முழுக்க வெளியில் நிற்கும் பட்சத்தில் மட்டுமே கிறித்துவர்கள், இஸ்லாமியரை விமர்சிப்பது சாத்தியமாகும். அவ்வாறு முழுக்க மதத்திற்கு வெளியே நிற்பது சாத்தியமில்லை. விவாகரத்து பெற்ற பின் மனைவியை விமர்சிக்க முடியுமா? முடியாது. அது போல் தான் இதுவும். பெரியார் இந்து மதத்திற்கு உள்ளே நின்றே தான் அதை விமர்சித்தார். பெர்ண்ட்னெண்ட் ரஸனும் கிறித்துவத்திற்கு உள்ளே நின்று தான் Why I am not a Christian எழுதுனார்.


இந்த அடிப்படை லாஜிக் புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே கேட்காதீர்கள். குதிரை மீதிருந்து இறங்கி அதை ஓட்ட முடியாது. முட்டையை உடைக்காமல் குடிக்க முடியாது. ஒன்றை அதன் வெளியில் நின்று விமர்சிக்க முடியாது.

Comments

manjoorraja said…
உண்மை தான். இந்து மதத்திலிருந்துக்கொண்டு விமர்சிக்க முடியும். மற்ற மதங்களில் அப்படி செய்தால் பெரிய பாதிப்புகள் உண்டு.
you know that a person should have in depth knowledge before judge or critise his own religion.....most of the people now does not have basic knowledge.
poornam said…
கேள்வியை சிறிது மாற்றிக்கேட்டால் நீங்கள் இவ்வளவு வசதியாகக் குழப்ப முடியாது.
முற்போக்குவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள்? மதச்சார்பற்றவர்களை ஹிந்து மதச்சார்பற்றவர் இஸ்லாமிய மதச்சார்பற்றவர் என்றுதான் பார்க்க முடியும் என்கிறீர்கள்
முற்போக்கு/ பகுத்தறிவுக்காரர்களையும் அப்படித்தான் வகைப்படுத்துவீர்களா?
அப்படி அடிப்படையில் தான் ஒரு இந்து/ இஸ்லாம் என்பதை நினைவு இல்லாமல் ஒருவர் முற்போக்காக இருக்க முடியாதென்றால் அது உண்மையான முற்போக்குதானா என்கிற கேள்வி எழுகிறதே?
மற்றொரு அபத்தம்:
ஒரு அமைப்புக்கு வெளியிலிருந்து அதை விமர்சிக்க முடியாதென்ற உங்கள் வாதம் அடிப்படை இல்லாதது. உதாரணமாக முடியாட்சியை உலகம் முழுக்க விமர்சித்துத் தூக்கியெறிந்தவர்களெல்லாம் முடியரசின் அங்கமானவர்களா? அதற்கு வெளியிலிருந்த சாமான்யர்களா? முதலாளித்துவத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட்களெல்லாம் முதாலாளி வர்க்கத்திலிருந்தே உருவானவர்கள்தானா? உழைப்பாளிகளா?

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...