முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" மற்றும் The Sense of an Ending குறித்து ஒரு கடிதம்

Hello Abilash, I’m Muralidharan from Chennai. I’ve not written or spoken to you before, but I’ve only been interacting with you on your Facebook posts. I wanted to write to you about two things before I continue. I read your novel ‘You’ve Come to the End of the Story’ last year. It was a hard-hitting novel and a good example of straddling the line between crime and literary fiction. The ending felt very surreal and evocative. I’m re-reading the last segments now, after the Tamil Nadu elections, and in some sense, now the ending feels very realistic. I want to write about it separately. I enrolled in the ‘Outlining for Fiction’ workshop but couldn’t attend for personal reasons. Your beat sheet was interesting – I’ve used similar ones for some screenwriting assignments. It was a relief to know that such things can be used in Lit-fic novels as well. Many novels I read in Tamil are unplotted and because of the lack of structure, it’s difficult to reflect on what was the intention behind wr...

ஒரு கால் நூற்றாண்டு விழா

  எனக்கு ஒரு ஆசை. ஜெயமோகனின் கருத்துக்களுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்போர் அதற்கு ஒரு கால் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். முடிந்தால் சென்னையிலே ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் ஒரு சிலரை அங்கீகரித்து கேடயமும் வழங்க வேண்டும். அல்லது இதை ஒரு பகடி நிகழ்வாகவும் நடத்தலாம். ஏனென்றால் அவரை என்னதான் கண்டித்தாலும் விமர்சித்து ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதினாலும் அவர் அவற்றில் இருந்து எதையும் பெறுவதோ தன்னைப் பொருட்படுத்துவதோ இல்லை. காதில் வாங்கிக் கொள்வது கூட இல்லை. அவர் தனக்கான ஆற்றலையும் இவ்வாறுதான் உருவாக்கிக் கொள்கிறார். என்ன சொன்னாலும் அவருக்குப் புரியாது என்பது யாருக்கும் புரிவதில்லை (என்னையும் சேர்த்துதான்). அவரது கருத்துக்கள் பொதுவெளியை மாசாக்கிவிடக் கூடாது எனும் அக்கறையிலேயே பலரும் இப்படி தனியே நின்று சண்டை செய்கிறார்கள். இவர்கள்தாம் என்றில்லை, ஜெயமோகன் இதுவரை யாருடனும் கருத்து விவாதமே பண்ணியதில்லை. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர் யாரைக் குறித்தும் எதைக் குறித்தும் இதுவரைக் கேள்வியே எழுப்பியதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும். அவருக்கு கேள்வியில்...

35 வருடங்களின் சலுகை

பொதுவாக தவெக அரசு குற்றம் செய்தால் ஓராண்டு சலுகை கொடுங்கள் என 'நடுநிலை' ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அமைச்சர் ஆனந்தோ 35 ஆண்டு சலுகை கேட்கிறார். அமைச்சர் ஆனந்திடம் அவரது கட்சிப் பெண்கள் சென்று தவெக நிர்வாகிகள் தம்மைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாகச் சொன்னால் அவர் "நீ சொன்னதுக்கு அவருக்கு எதிரா ஆக்‌ஷன் எடுக்க முடியாதும்மா. அவர் 35 வருசமா கட்சியில இருக்கிறாரு." இதைத்தான் சில எம்.எல்.ஏக்களைப் பற்றியும் அவர் மேடைகளில் சொல்கிறார். கட்சி ஆரம்பிச்சே ரெண்டு வருசம்தானே ஆகுது எனக் கேட்டால் ரசிகர் மன்றமே கட்சிதான் என்கிறார். அதாவது அவர் மனதில் தவெக ஒரு கட்சியே அல்ல. இவ்விசயத்தில் அவர் நேர்மையாக இருக்கிறார் - உண்மையிலே தவெக ஒரு கட்சியே அல்லவென்றுதான் அதில் சிறிது காலம் இருந்து வெளிவந்தவர்களும் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றால் எப்படி நியாயமாகும்? ஒருவர் 35 வருடங்களாக ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறார் என்பதால் அவர் ஒரு பாலியல் குற்றமிழைத்தால் நடவடிக்கை இல்லை என எந்த ஊர் சட்டமும் சொல்லவில்லை. ரசிகர் மன்றமோ, ஆன்மீக அமைப்போ எத...

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

தன் தலையைத் தானே துண்டிக்கும் ஈ

  நேற்று ஒரு காணொளித் துணுக்கைக் கண்டுகொண்டிருந்தேன் - ஒரு ஈ தன்னுடைய உடலைச் கால்களால் சுத்தப்படுத்துகிறது. அது ஆவேசமாகத் தலையில் இருந்து அழுக்கை நீக்கி அதை சீர்படுத்தும்போது அது எதிர்பாராமல் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அதன் சுவாச உறுப்பு தலையில் இல்லையென்பதால் அதனால் சற்று நேரம் உயிருடன் இருக்க இயலும், அதன் மூளையை அது இழந்தாலும் மார் நரம்புகளைக் கொண்டு அதனால் தன் இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியும். ஆனாலும் விரைவில் உணவும் நீரும் இன்றி அது இறந்து போகும் என ஆய்வாளர் சொல்கிறார். குறிப்பாக ஈயின் தலை ஏற்கனவே காயப்பட்டிருக்கும்போதோ கழுத்து பலவீனமாக உள்ளபோதோ இப்படியான விபத்து நடக்க வாய்ப்பதிகம். ஈ தான் வேகமாகப் பறக்கவும் தன் உடலில் உள்ள வாசனைகளை அகற்றவும் சுத்தப்படுத்துவது அவசியம், அதே நேரம் அது மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகும்போது அது மிகை சுத்தப்படுத்துதலில் ஈடுபடக் கூடும் என்றும் ஆய்வாளர் சொல்கிறார். எனக்கு அப்போது மனித மனம் குறித்த உன்னத உண்மையை அவர் சொலவதாகத் தோன்றியது. நாமும் இதையே கடும் நெருக்கடியின்போது, அழுத்தத்தின் போது பண்ணுகிறோம். சில நேரங்களில் நமது உடலை வருத்துகிறோம், அதைத் துன்...

சினிமா ரசனையும் அரசியலும்

  ரசிக மனநிலை இன்று தமிழ்நாட்டு அரசியலைச் சாக்கடைக்குள் தள்ளிவிட்டதுதான். ஆனால் அதற்குத் தீர்வுதான் என்ன? அணில்கள், தறுதலைகள் என ரசிக மனநிலையைக் கண்டு அஞ்சி அதைப் பகடி செய்யாமல் அதனுடன் உரையாடலாம். அவர்களை உருவாக்கும் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் நான் தோழர் பல்லவியிடம் அவர் ஏன் சிறுவயதில் விஜய் ரசிகராக இருந்தார், பின்னர் எவ்வாறு திருந்தினார் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தெளிவாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். எனக்கு ஒரு ரசிகரின் உளவியலை, அவர் முன்னாள் ரசிகராக இருந்தாலும், தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறது. அப்போதே தற்போதைய ரசிகர்களுடன் உரையாட முடியும். ஒவ்வொரு உரையாடலும் ஏதாவது ஒருவிதத்தில் பலனளிக்கும். உண்மையான பலன் என்பது சினிமா மோகம் அரசியலை விட்டு ஒழிவதுதான். அதற்கு ஒரு தீர்வு தமிழ்நாட்டில் வணிக சினிமாவுக்கு எதிராக ஒரு இயக்கம் தோன்றுவது. வங்க, மலையாள மொழிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த அத்தகைய இயக்கங்கள் ஏனோ தமிழில் நிகழவில்லை. இங்கு இடதுசாரி ஆதரவாளர்களும் மாஸ் சினிமா இயக்கத்துடன் கைகோத்தார்கள். அவர்கள் சினிமா எடுக்கவே விரும்பினா...

வாக்காளர்களின் கருத்து மோதல்

அரசியல் மீம்களிலும் பதிவுகளிலும் தவெக எதிர்ப்பாளர்களின் கண்களை விஜய்யின் பெண் ஆதரவாளர்களின் செயல்கள் மீதுள்ள எரிச்சலை, அவர்களைப் பற்றின கவலைகளை, பகடிகளைப் பார்க்கிறேன். காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரையில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் ஒத்து வராது. தரவுகளைப் பார்ப்பதே சரி. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னால் டெக்கான் கிரானிக்கல் தொகுதி வாரியாக வாக்கு செலுத்திய வாக்காளர்களின் பாலின அடையாளத்தையும் அந்தந்த கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளையும் வைத்து ஒரு ஆய்வைச் செய்து வெளியிட்டிருந்தது. அதன்படி திமுக இம்முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிகப் பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்கும்போதெல்லாம் திமுக வெற்றிருக்கிறது. மாறாக ஆண்கள் அதிகமாக வாக்களித்தபோது தவெக வென்றிருக்கிறது. இதை நீங்கள் அப்பட்டமாகப் பார்க்க முடியாது. விஜய்யின் ரசிகைகளைப் போல இப்பெண்கள் தம்மை ஆரவாரமாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் திமுகவின் ஏதோ சில திட்டங்களால் பலனடைந்ததாக உணரும் கணிசமான பெண்கள் இருக்கிறார்கள். இதை நான் ஒரு சாதனையாகச் சொல்லவில்லை - திமுக இந்த வாக்காளர்...

நாடகம் ஆரம்பம்!

  சரியாக இடைத்தேர்தலுக்கு முன் மத்தியப் குற்றப்பிரிவு போலிசார் ரெய்டு செய்கிறார்கள் எனில் இது ஏற்கனவே திட்டமிட்டது எனத் தெரிகிறது - அதாவது தவெக அரசின் நிர்வாகப் போதாமை, ஊழல் புகார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, மின்தட்டு, மின்கட்டண உயர்வு எனப் பல பிரச்சினைகளால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் தம் சாதனைகளைச் சொல்லி தவெகவால் பிரச்சாரம் பண்ண இயலாது. ஒரே வழி கவனம் திருப்பி உணர்ச்சிகளைத் தூண்டி பிரச்சாரம் பண்ணுவது. இடைத்தேர்தலில் தவெக முழுக்க முழுக்க திமுகவின் ஊழல் புகார்களைப் பற்றியே பேசப் போகிறது. தன்னுடையது ஊழலற்ற ஆட்சி, திமுக ஊழல் ஆட்சி செய்தது என விஜய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறார். எப்படியும் வழக்கில் ஆதாரம் இல்லையென அன்பில் மகேஸை விடுதலை பண்ணுவார்கள். அப்போது இன்னொரு வழக்கை திமுக மீது இவர்களோ மத்திய அரசை வைத்தோ பதிவு பண்ணுவார்கள். அதுவும் பின்னர் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். இப்படியே ஐந்தாண்டுகளை ஓட்டுவார்கள். ஒன்றிய அரசு இவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பார்க்கையில் எந்தரங்கள் இடைத்தேர்தலிலும் வாக்குகளை தவெகவுக்கு அள்ளி வழங்குமெனத் தெரிகிறது. அ...

நாம் நிலைக்க மாட்டோமா, நிஜமாகவே?

  டபிள்யு ஹெச் ஆடனின் கவிதைகளை முதலில் நான் வாசித்தது என் கல்லூரிப் படிப்பின்போது. அடுத்து நான் ஆசீரியரானபோது. அதிகச் சிக்கல் இல்லாத நேரடியான ஒரு பகடிக் கவிஞர் என்றே புரிந்து வைத்திருந்தேன். அண்மையில் நான் ஹேனா ஆரெண்டின் "ஹெச் ஆடனை நினைவுகொள்வது" எனும் கட்டுரையைப் படித்தபோதுதான் அவரது அருமை விளங்கியது. குறிப்பாக மொழியை அவர் எப்படி விளையாட்டுத்தனத்தோடு (அதாவது நெகிழ்வுடன்) பயன்படுத்துகிறார், அன்றாட வழக்காறுகளை எப்படி மிகவும் சரளமாக நகைமுரணுடன் கையாள்கிறார் என விவரித்திருந்தார். அதன் பிறகு நான் அவரது தொகுப்பினை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அவரிடம் உள்ள ஒரு பூடகம். சொற்றொடர்களை முழுமை பெறாமல் பயன்படுத்துவது, சில தகவல்களை பின்னணியின்றிப் பயப்படுத்துவது, சொல்லப்பட்டவற்றுக்கு இறுதியில் ஒரு முழுமை கொண்டு வருவதுதான் அவரது உத்தி. இது அவரது கவிதைகளை பலமுறைப் படிக்கவும் அதில் தோயவும் வைக்கிறது. அக்கவிதைகளுக்குள் நாம் கற்பனை பண்ணவும் பேசவும் பல்வேறு சாத்தியங்களும் பரந்த வெளியும் உள்ளன. இதைச் சொல்லாவிட்டால் வாசகருக்குப் புரியாதோ எனும் அச்சம் பல சமயங்களில் நாம் க...

ஆட்சிக் கவிழ்ப்பு, ஆளுநர் ஆட்சி எனும் பேய்க் கதைகள்

  ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆளுநர் ஆட்சியையும் (அதாவது ஜனாதிபதி ஆட்சி) நான் கதையாடல்களாகக் கருதுவதற்கு முக்கிய காரணம் அவை சுடுகாட்டுப் பேய்க் கதைகளைப் போலிருப்பதனால்தான். யாரும் சுடுகாட்டுப் பேயைப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் யாரோ ஒருவர் பார்த்ததாக வைத்து எல்லாருமே மனதுக்குள் பார்த்துக் கொண்டு பயந்து கொண்டிருப்பார்கள். யாராவது அதை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால் பயம் போய்விடும். பிரச்சினையே யாராலும் பார்க்க முடிவதில்லை என்பதே. நாம் கடைசியாக எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை, ஆளுநர் ஆட்சியைப் பார்த்தோம்? யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பிற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது எனக் கேளுங்கள். மணிப்பூரில் 2025இல் கலவரம் காரணமாக நடந்தது. மகாராஷ்டிராவில் 2019இல் பெரும்பான்மை கிடைக்காததால் மூன்று வாரங்கள் நடந்தது. ஜம்மூ காஷ்மீரில் அங்குள்ள வரலாற்றுச் சூழல் காரணமாக 2018-19இல் நடந்தது. உத்தராகண்டிலும் அருணாச்சல பிரதேசத்திலும் 2016இல் சொற்ப காலம்தான் நடந்தது. உச்சநீதிமன்ற S.R. Bommai v. Union of India (1994) தீர்ப்பு காரணமாக சட்டப்பிரிவு 356ஐப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சிய...

முதலையுடன் டின்னர் பார்ட்டி

ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல்...

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இரு இடதுசாரி கட்சிகளிடமும் சில கேள்விகள்

1) தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்துக்கும், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கும் எதிராகப் போராட்டம் பண்ணுகிறீர்கள். அரசு உங்களைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. அதே நேரம், நீங்கள் ஆதரவைத் திரும்ப பெறுவோம், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் எனச் சொன்னால் இறங்கி வருவார்கள். அதைச் செய்யாமல் நீங்கள் ஏன் பம்முகிறீர்கள்? 2) அரசின் முடிவில் தலையிடக் கூடாது, ஆனால் அறிவுறுத்துவோம், விமர்சிப்போம், போராடுவோம் என்றால் என்ன மாதிரி ஆதரவு நடவடிக்கை இது? 3) உங்கள் நோக்கம் பெயருக்குப் போராடுவதா அல்லது அரசின் மீது அழுத்தம் போட்டு மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதா? பின்னது எனில் உங்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டை நீங்கள் ஏன் எடுப்பதில்லை? 4) பாஜகவின் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் தவெக அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்காரர் ஒருவரே சட்டத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவை விமர்சித்து ஒரு சொல்லைச் சொல்லக் கூட தவெகவினர் தம் கூட்டணிக் கட்சி அமைச்சரை அனுமதிப்பதில்லை. சபாநாயகர் உடனே நேரடியாகத் தடை போடுகிறார். அமித் ஷா வந்ததும் விஜய...

இன்று சற்று உயர்ந்துவிட்ட நிலையில் டபிள்யூ ஹெச் ஆடன் தமிழில் ஆர். அபிலாஷ்

  பனிமலைக்கு அப்பால், சிற்றோடைச் சரளைக்கற்களுக்கு மேல் ஓடுகிற  காற்று நுழையாத பழத்தோட்டத்தில் சேர்ந்து நடந்த இதே போன்ற மாலைகளை நினைத்துப் பார்க்கிறோம், இன்று சற்று உயர்ந்து விட்ட நிலையில், இரவுகள் வரும் பனியைச் சுமந்து; தனித்தச் சாலைகளில் எதிரி மிகுதியான எளிய வினாக்களைத் தொடுக்கிறான் என்பதால் மரித்தவர் ஊளையிடுவர் நிலக்கூம்புகளில் கடுங்காற்றடிக்கும் தமது உறைவிடங்களில் இருந்து ஆனால் இப்போது ஆனந்தமே, இருவரும் அருகருகில் இல்லையெனினும், பள்ளத்தாக்கில் வழியெங்கும் பண்ணைகள் ஒளிர்வதைப் பார்க்கிறோம்; சம்மட்டியடி நிற்கிறது கீழே ஆலைக் கொட்டகையில் வீடு திரும்புகிறார்கள் பணியாளர்கள் அத்தோடு. விடியலில் சப்தங்கள் கொண்டு வரும் சுதந்திரத்தைச் சிலருக்கு, ஆனால் இந்த அமைதியை அல்ல எப்பறவையும் மறுதலிக்க முடியாது: தற்காலிகமெனினும் இங்கே இதோ, இப்போதைக்குப் போதுமானது ஏதோ ஒன்று நிறைவேறியது இந்நேரம், விரும்பியோ சகித்துக் கொண்டோ. (மார்ச் 1928) ஆங்கில மூலம்: Taller To-day - W. H Auden Taller to-day, we remember similar evenings, Walking together in a windless orchard Where the brook runs...

ஒற்றன் - டபிள்யு ஹெச் ஆடன் தமிழில் ஆர். அபிலாஷ்

  அவனுக்குத் தெரிந்தது , கணவாயின் மீதான கட்டுப்பாடே , இப்புதிய மாவட்டத்திற்கான துருப்புச்சீட்டு , ஆனால் யார் அதைப் பெறுவர் ?   பயிற்சி பெற்ற ஒற்றனான அவன் ஒரு சூழ்ச்சிக்கார வழிகாட்டியின் பழைய தந்திரங்களால் மயக்கப்பட்டு ஒரு பொறியில் போய் விழுந்துவிட்டான் . கிரீன்ஹெர்த்தில் ஒரு அணை அமைப்பதற்கான அருமையான இடம் இருந்தது அத்தோடு , ரயில் நிலையங்களைச் சற்று அருகே அமைக்க முயன்றிருந்தால்   மின்தொடர்பும் எளிதாகி இருந்திருக்கும் . அவர்கள் அவனது சேதிகளை உதாசீனித்தனர் : பாலங்கள் கட்டப்படவில்லை ; தொல்லை வருகிறது .  வாரக்கணக்காய் பாலைவனத்தில் வருந்திக் கிடந்தவனுக்கு கனிவாகத் தொனிக்கிறது தெருவோர இசை . இருளில் ஓடி மறையும் நீரினால் எழுப்பப்படும் அவன் தான் ஏற்கனவே கனாக் கண்ட சகிக்காக அடிக்கடி நிசியைப் பழித்திருக்கிறான் . அவர்கள் சுடத்தான் போகிறார்கள் ,  ஒரு போதும் இணைந்திராத எளிதில் இருவரைப் பிரிக்கும் வகையில் . ( ஜனவரி 1928)   ஆங்கில மூலம் :   The Secret Agent - W.H Auden Cont...