6) காதல் எப்போதும் முரண்களுக்குள் வாழ்கிறது - நிதானமாய் கச்சிதமாய் கராறாய் பகுத்தறிவுடன் நேர்த்தியாய் இருப்பவர்களுக்கானது அல்ல காதல் . அது ஒரு பொய்யான குமாஸ்தாத்தனமான ஆண் - பெண் உறவை மட்டுமே உருவாக்கும் . நீ எனக்குத் தேவையானதைக் கொடு , நான் உனக்குத் தேவையானதை திரும்பத் தருகிறேன் என்பது ஒப்பந்தம் , ஒருவித விபச்சாரம் . ‘ நீ உனக்குத் தேவையானதைக் கேள் , ஆனால் நான் அதைத் தர மாட்டேன் , எனக்குத் தர ஆசை என்பதாலே தர மாட்டேன் , நீ கேட்டு வாங்கிக் கொள்ளேன் ’ என சீண்டுவதே காதல் . ஒன்றைக் கொடுத்து விட்டால் அங்கு காதல் முடிந்து போகிறது , அதை கொடுத்தும் கொடுக்காமல் மீதம் வைப்பதே காதலை தக்க வைக்கிறது . ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள் . அது உங்கள் மீதான நம்பிக்கையை குலைக்கும் . ஆனால் ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக மற்றொன்றை சொல்லுங்கள் . இந்த இரண்டுக்கும் இடையில் ஊசலாடுவதே உங்களுடைய உண்மை எனப் புரிய வையுங்கள் . காதலில் செல்லுபடியாகும் ஒரே உண்மை தன் வாலை தானே வளைந்து தின்னும் ப...