சமகால தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வெகு அரிதாகத் தான் ரஞ்சித்தைப் போல தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றக் கூடியராக ஒரு இயக்குநர் தோன்றுவார். 2010இல் சுசீந்திரனின் "நான் மகான் அல்ல" படம் குறித்த ஒரு விவாதம் கருந்தேள் ராஜேஷின் பிளாகில் நடக்கிறது. தமிழ் சினிமாவில் தலித்துகள் குறித்த பதிவுகள் எவ்வளவு அபத்தமாக உள்ளது என ரஞ்சித் ராஜேஷுக்கு அனுப்பிய மின்னஞ்சலை அவர் பதிவிடுகிறார். அதை ஒட்டி பின்னூட்டங்களில் ஒரு நீண்ட விவாதம். அப்போது ரஞ்சித் ஒரு இயக்குநர் அல்ல. தன்னை ஒரு உதவி இயக்குநர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவருடைய தரப்பை பின்னூட்டங்களில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சினிமாவில் உள்ள பாத்திரங்களின் சாதியைப் பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஏன் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என ரஞ்சித் கேள்வி எழுப்ப யாரும் அதைப் பொருட்படுத்தி யோசிக்கவில்லை. அதன் பின்னர் "அட்டகத்தி" எனும் தனது முதல் படத்தின் மூலம் வளர்ந்து "மெட்ராஸ்" மூலம் வெகுஜன தளத்தில் கால் பாவி நின...