முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஈ ஸாலா ...

கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி ஒரு நண்பர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. காங்கிரஸ் 110க்கு மேல் வாங்கி எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சிக்கு வருமா இல்லை 80-85 என்று இரு கட்சிகளும் டிக்கிலோனா பண்ணி மூன்றாவது அணி, கட்சி தாவும் ஹை ஜம்ப் பேர்வழிகள் எல்லாம் பாஜகவின் ஐந்து நட்சத்திரம் விடுதிகள் இருந்து சரக்கடித்து பேரம் பேசி அதையே டிவியில் காட்டி நம்மைக் கடுப்படிப்பார்களா? கர்நாடகா முழுக்க ஒரே மனநிலை இல்லை, ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு அரசியல் முடிவுடன் இருக்கிறது என்கிறார்கள். பொதுவாக ஆளும் பொம்மை அரசு மீது மிகுந்த அதிருப்தி இருந்தாலும் நான் வசிக்கும் பகுதியில் பெரிய அலை ஒன்றையும் காண முடியவில்லை. நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் அதே மதவெறுப்பையே காண முடிகிறது. ஒருவேளை எனக்கு கன்னடம் தெரிந்து உளவட்டங்களீல் இருந்தால் நாடி பிடித்து பார்த்திருப்பேன். அதனால் நான் சொல்வதெல்லாம் மேம்போக்காக தெரிவதையும் செய்திகளையும் வைத்தே. தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பே ஒரு மனவோட்டம் வெளிப்படையாகத் தெரியும் - இங்கு அப்படி இல்லை என்கிறேன். அப்புறம் ...

ஜெயமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

  ஜெயமோகனைப் போல நேர மேலாண்மை செய்ய வேண்டும், எழுத்து, அது குறித்த அக்கறைகளுக்காக நேரத்தை அளந்து பயன்படுத்த வேண்டும், முழு இதயத்துடன் எழுத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும், ஒப்புக்கொடுத்த பின் நம் எழுத்தின் தரத்தை, முக்கியத்துவத்தை முழுமையாக நம்ப வேண்டும், இளம்பிரயாயத்தில் ஒரு அழகியை நேசித்து பித்தாவதைப் போல எழுத்தின் பின்னே சுற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நாம் நினைப்பது நடக்கவில்லையா? அதை நாமே நிகழ்த்திப் பார்க்க வேண்டும். அதற்காக எதையும் பயன்படுத்த, செய்ய தயங்கக் கூடாது என்பது ஒரு எழுத்தாளனாக அவர் வாழ்வின் முக்கியமான சேதி. ஒரு எழுத்தாளனாக என்னுடைய அர்ப்பணிப்பு, கடப்பாடு, பித்து முழுக்க நான் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டதே. கீதையில் கிருஷ்ணர் சொல்வார், போர் என்று வந்துவிட்டால், நீயும் போரும் வேறுவேறல்ல, நீ அதுவாக ஆகிட வேண்டும், நீ ஆயுதத்தை பயன்படுத்தவில்லை, நீதே அந்த ஆயுதம், அதன் பிறகு செயலே உன் பொறுப்பு, செயலுக்கு நீ பொறுப்பல்ல (என் மொழியில் கருத்தைக் கொடுத்திருக்கிறேன்.) ஜெயமோகனைப் பார்க்கையில் எனக்கு இந்த பார்வையே நினைவு வரும். தன் சுவடுகளைத் திரும்பிப் பா...

அரசு இந்த 12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!

ஏனென்றால், முதலில், பொருளாதார வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களர்கள் லாபத்தை பெருக்கும் போது நிகழ்வதல்ல, சந்தைக்கு பணம் வந்தாலே அது நிகழும். அதற்கு மக்களிடம் அதிக பணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக பணப்புழக்கம் இல்லாவிடில் பணவீக்கம் ஏற்படும். அதற்கு முதலில் எல்லா மக்களுக்கும் கையில் பணம் வரும்படி தொழிலோ வேலையோ இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அதானி, அம்பானி ஆகியோரின் லாபம் பல நூறு மடங்கு அதிகரித்தது, ஆனால் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைப் பார்த்தோம். பொருளாதாரம் நொடித்தால் இதே முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிடுவார்கள். இதை நான் சொல்லவில்லை, ஜி.எஸ்.டியை எதிர்த்து பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் சொன்னது.   8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்தும் போது இரட்டை ஷிப்ட் பணி ஒன்றரை ஷிப்ட் ஆகும். இரண்டு பேர் பண்ணின வேலை ஒருத்தர் செய்வதாகும். இருவரது சம்பளம் ஒருவரது சம்பளம் ஆகும். இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நமது பொருளாதாரத்துக்கே கேடு. ஏனென்றால் பணமானது முதலாளியின் ஜேப்புக்குப் போனால் அது அங்கேயே...

ஒரு பாராட்டு

  "வணக்கம் அபிலாஷ். குடும்பநல அமைப்பு பற்றி நீங்கள் தொடர்ந்து பதிவிடுவது பெரியார் செய்ததற்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல. நீங்கள் குறிப்பிடும் பெண்கள் உத்தேசமாக 90 களுக்கு பிந்தைய வருடங்களில் பிறந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு அதிகம் என்பதையும் அறிவேன். ஏனெனில் நான் குடும்ப அமைப்பில் வெற்றி பெற்றிருந்தாலும் என் உடன் பிறந்தவர்கள், சுற்றியுள்ளவர்களை காண்கையில், குடும்ப அமைப்பிற்குள் நுழையும் பெண்கள் பெரும்பாலும் மேலாளர்-குமாஸ்தா உறவுமுறையையே பேணுவதாகத் தோன்றும். பெரும்பாலும் பெண்களில் தன்னைப்பற்றி, தன்னைச்சார்ந்து மட்டுமே யோசிக்கும் தற்குறிகள் வாழ் காலம் இது. இப்போதைய நவீன, படித்த ஓரளவு பகுத்தறியும் நிலையில் உள்ள காலத்திலேயே உங்களுக்கு இவ்வளவு எதிர்வினைகள் வருகிறதென்றால் பெரியாருக்கு எவ்வளவு வந்திருக்கும் என்று யோசித்தாலே மலைப்பாக இருக்கிறது. யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் போது எழும் அதிர்ச்சி அது. தன்னை விமர்சிக்கும் போது/ தன்னைப் பற்றிய தான் அறியாத உண்மையை எழுதும் போது ஏற்படும் பதட்டத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே அதன் பொருள். என்றால் நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டி...

வேறு கதை ஏன் இல்லை?

  புர்காவைத் தவிர இஸ்லாமியர்கள் பற்றி படமெடுக்க வேற கதையே இல்லையா டா இஸ்லாமியனுக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்க மாட்டேங்குது யா இந்த அவலத்தை பத்தி ஒரு படமா எடுங்க யா எங்க வீட்டுல துளசி செடி இருக்கு அதனால முஸ்லீமுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டோமுங்க ன்னு நேரடியாவே சொல்றாங்க. இதை என்னிடம் அந்த ஓனரம்மா சொன்ன போது துளசி செடியை விட நான் கீழானவனா? என்னடா ஊர் இது ன்னு தோன்றியது. இல்லைன்னா ஹோட்டல் மாதிரி வெஜிடேறியன் போர்டு போடுறாங்க... இதேயெல்லாம் அவணப்படுத்துங்க. புர்கா, இத்தா விஷயத்தை பேசுறதுனால இவங்களுக்கு என்ன லாபமோ தெரியல. - ஹபீப் ஹாதி மாற்றுமதத்தவருக்கு இஸ்லாமிய சமூகம் பற்றி பேசுவதில் அல்ல அவர்களுடைய பெண்களைப் பற்றி பேசுவதிலே விருப்பம் - அப்போதுதான் அவர்களை பிற்போக்கு, காட்டுமிராண்டி என முத்திரை குத்தி மேலும் ஒடுக்க முடியும், தமது ஒடுக்குமுறையை நவீனப்படுத்துதலின் பெயரில் நியாயப்படுத்த முடியும்! அது மட்டுமல்ல புர்கா என்று வந்துவிட்டாலே முகத்திரைக்குப் பின்னால் ஒரு அழகிய முகம் உள்ளதா இல்லையா என்பதே ஆர்வம்! வாடகை வீடு, வேலைவேலை வாய்ப்பு, உணவு போன்றவைகளை பேசுவதில் அதே கிளர்ச்சி இருக்காது! ...

ஜீனோவுக்கு 80 வயது

ஜீனோவுக்கு வயது பதினைந்தரை ஆகிறது. மனித வயதுப்படி 80 ஆண்டுகள். நாங்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம். சமாதானமாவோம். திரும்பவும் சண்டை போடுவோம். திரும்பவும் அவன் வந்து என் மடியில் படுப்பான், நான் அவன் மீது தலைவைத்துக் கொள்வேன். இப்போது பழைய வேகம் இல்லை. அவர் ஓவர் டிராமிட்டாக உணர்ச்சிகளைக் காட்டுவதால் நான் அவனுக்கு சிவாஜி கணேசன் எனப் பெயர் வைத்திருந்தேன். இப்போது ஆள் மோகன்லால் ஆகி விட்டான். பாதி சமயங்களில் என்னதான் நினைக்கிறான் என்றே தெரியவில்லை. முன்பு நான் எழுந்தவுடனே அவனும் எழுந்து நெட்டி முறித்து கொட்டாவி விடுவான். நான் எங்கு போனாலும் என் கால் அல்லது சக்கர நாற்காலியை ஒட்டியே இருப்பான். இப்போது ஊட்டிக்கு தேனிலவு கொண்டாட வந்த மனைவியைப் போல தூங்கிக்கொண்டே இருக்கிறான். ஆனாலும் நீடித்த உறவு இது, நீங்காத உறவு இது!

“வரதட்சிணை கொடுமை”

அண்மையில் வந்த சட்டத்திருத்தத்தின் படி பெற்றோர்கள் தம் மகளுக்கு வரதட்சிணையைக் கொடுக்கலாம், அதன் பெயர் பரிசு. ஆனால் அதையே அவர்கள் பின்னர் தம்மை வற்புறுத்தி வாங்கினார்கள் என்று சொல்லிவிட்டால் அது ‘வரதட்சிணை’ ஆகிவிடும். இது சிக்கலான சட்டம், பாலின பாரபட்சம் கொண்ட சட்டம் - ஏனென்றால் நாம் நீயா நானா போன்ற ரியாலிட்டி ஷோக்களிலேயே இளம்பெண்கள் தம்முடைய திருமணத்தின் போது எவ்வளவு பணம், நகை, வாகனங்கள், வீடு போன்றவை அசையும், அசையா சொத்துக்களாக தம் பெற்றோர் அளிக்க வேண்டும் எனக் கோருவதைப் பார்த்திருக்கிறோம். நேரிலும் இத்தகைய காட்சிகளை இன்று காண்கிறோம். இதற்கு இப்பெண்கள் சொல்லும் சல்ஜாப்பு தாம் மணமாகி மற்றொரு வீட்டுக்குப் போகிறோம் என்பது. ஆனால் ‘ஆணுக்கு அசையா சொத்து, பெண்ணுக்கு அசையும் சொத்து’ எனும் பழைய நடைமுறையின் நீட்சியே இது என்பது வெளிப்படையானது. நம் சட்டம் என்ன பண்ணிவிட்டது என்றால் ஒரே நேரத்தில் பெண்ணுக்கு அசையும் சொத்து (“பரிசு”) மற்றும் அசையா சொத்து (“சொத்துரிமை”) இருக்கலாம் என்பதை சட்டபூர்வமாக்கிவிட்டது. அத்துடன் நின்றிருந்தால் கூட பிரச்சினையில்லை - இந்த “பரிசை” எந்நேரம் வேண்டுமெனிலும் பெண்ணின்...