நாளை இந்தியா நியுசிலாந்து அரை இறுதிப் போட்டி. தலைவிதியைத் தீர்மானிக்கும் நெருக்கடியான போட்டிகளில் இந்தியா “இதயம்” முரளி போல திக்கித்திக்கி நிற்குமா அல்லது எம்.ஜி.ஆர் போல சரோஜா தேவியை இடுப்பிலேயே வளைத்துப் பிடிக்குமா என்பதை நாளைப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்றால் இறுதிப்போட்டியை அந்த வேகத்திலே போய் அடித்துவிடுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆஸ்திரேலியா நிச்சயமாக இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆதரிக்கும் பெரும் மக்கள் திரளுக்கு முன் கடும் அழுத்தத்தில் ஆடும். சொதப்பும். ஆக, நாளைய போட்டி உலகக்கோப்பை 2023ஐ ஆஸ்திரேலியா வெல்வதற்கான அதிர்ஷ்டம் எந்தளவுக்கு உள்ளது என்பதைக் காட்டும். மற்றபடி உளவியல் நெருக்கடிக்கு அப்பால் நியுசிலாந்து ஒரு குழந்தைப்பாப்பா அணி என உறுதியாக நம்புகிறேன். ஹீராவோ பீராவோ, காதல் கண்றாவி, அழுகை எல்லாம் வேண்டாம், வாடா அடிப்போம் என இந்தியா இறங்கினால் நியுசிலாந்தை ஊதித் தள்ளிவிடுவார்கள். நாளை களமிறங்குவது முரளியா எம்.ஜி.ஆரா என்பதே முக்கியமான கேள்வி. நியுசிலாந்திடம் பந்துவீச்சில் விக்கெட் எடுக்க ஆளில்லை. அதுவும் நல்ல ஆடுதளத்தில் அவர்களுக்கு வேகமோ ஸ்விங்கோ சுழலோ இல்லை. முழுக்க மட...