முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

போர்த்தொற்று நுண்கிருமிகள்

  போரை தேசப்பற்று, தேசப்பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி மட்டும் பார்ப்பது அபாரமான மூடத்தனம் மட்டுமே. பொதுவாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய நிதியில், ஆசியில் நடக்கும் ஊடக நிறுவனங்கள், கட்சியின் சமூகவலைதள டுரோல்கள் சேர்ந்து நாட்டின் பெரும்பகுதி மக்கள் மிருகங்களைப் போல மாறி யுத்த வெறியை ஆதரிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள், சிந்தனையை அவ்வாறு மாற்ற முயல்கிறார்கள். இவர்களை நோய்த்தொற்றைப் பரப்பும் நுண்கிருமிகளுடனே ஒப்பிட முடியும் - நோய் எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறதோ அந்தளவுக்கு வேகமாக அவர்கள் பரவவும், நிலைக்கவும் செய்வார்கள். எல்லா நுண்கிருமிகளும் அவ்வாறே சிந்திக்கும். Armed Forces & Society எனும் நூலில் GAD BARZILAI and EFRAIM INBA எழுதியுள்ள கட்டுரையில் இஸ்ரேலில் பொதுமக்களிடம் தாம் நடத்திய ஒன்பது கருத்துக்கணிப்புகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் - தலைவர்களும் ஆளும் அரசும் எடுக்கும் போர் முடிவுகள், ஊடகப் பிரச்சாரம் மக்களுக்கு போர் வெறியைத் தூண்டும். அதேநேரம் எல்லாரும் இதற்கு பலியாவதில்லை. மக்களில் பலரும் போரை எதிர்க்கவே செய்கிறார்கள். அவர்களது குரலுக்கு நேரடியான வ...

எனது நூல்கள்

  Intiravu Nilavin Keezh (Uyirmmai Publications, 2009)  • Cricketin Marum Nirankal (Uyirmmai Publications, 2010)  • Kaalkal (Uyirmmai Publications, 2012)  • Bruce Lee: Sandaiyidatha Sandaiveeran (Uyirmmai Publications, 2013)  • Innum Mitcham Ulladhu Unadhu Naal (Uyirmmai Publications, 2014)  • Rasigan (Uyirmmai Publications, 2015)  • Kathai Mudivukku Vanthu Vitteerkal (Uyirmmai Publications, 2016)  • Appavin Pulikal (Uyirmmai Publications, 2017)  • Penkal Ippadiththan Ninaikkirarkila (Uyirmmai Publications, 2017)  • Appavin Pulikal (Uyirmmai Publications, 2017)  • 90-kalin Tamil Cinema (New Horizon Media, 2018)  • Vaanga English Pesalam - Part 1 (Uyirmmai Publications, 2017)  • Vaanga English Pesalam - Part 2 (Uyirmmai Publications, 2017)  • Vaanga English Pesalam - Part 3 (Uyirmmai Publications, 2017)  • Vaanga English Pesalam - Part 4 (Uyirmmai Publications, 2017)  • Devi (Uyirmmai Publications, 2019)...

ஆபரேஷன் சிந்தூர் - ஈவிரக்கமற்ற போர்வெறி

ஈவிரக்கமற்ற போர்வெறி இந்திய சேனல்கள் இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களில் குண்டு போட்டதாகச் சொல்கின்றன. ஸ்கைநியூஸில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் "தாக்குதல் நடத்தப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில். பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். நாளையே சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்துப் போய் காட்டப் போகிறேன். பாகிஸ்தான் மறுதாக்குதல் தொடுக்கும்." என்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சொல்லப்படும் தகவலில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கிறார்கள். 41 பேர்கள் காயம்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள படங்களில் இருந்து இந்திய அரசு குண்டுபோட்ட இடங்களில் குடியிருப்புகளும் அடங்கும், அப்பகுதியில் பொதுமக்கள் இருந்தார்கள் எனத் தெரிகிறது. நெருப்பு வானுயர எரிய அங்கு மக்கள் பைக்கில் போவதைக் காட்டுகிறார்கள். தீவிரவாதிகள் அங்கு இருந்தார்களோ இல்லையோ குடியிருப்புகள் உள்ள பகுதியில் குண்டு போட்டால், குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அதில் சிக்கி மக்கள் சாவார்கள் தானே? அவர்கள் என்ன தப்...

கோப்பென்ஹேகன் பல்லைக்கழகம் வழங்கிய கீர்க்கெகாட் கோர்ஸரா வகுப்பில் தேர்வானேன்

நான் மிகவும் ரசித்துப் படித்த கோர்சரா வகுப்பு இது. வகுப்பை நடத்திய ஜான் ஸ்டுவர்ட் உலகளவில் மதிக்கப்படுகிற கீர்க்கெகாட் அறிஞர். Kierkegaard’s Relations to Hegel Reconsidered (Cambridge) மற்றும் Idealism and Existentialism (Continuum) ஆகிய நூல்களை எழுதியவர். Kierkegaard Research: Sources, Reception and Resources எனும் ஆய்விதழின் தலைமை ஆசிரியர். இவ்வகுப்பின் ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று, நான்கு காணொளிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ள கீர்க்கெகாட்டின் நூல்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அத்தியாயங்களைப் படிக்க வேண்டும். நான் ஏற்கனவே கீர்க்கெட்காட்டை ஓரளவுக்கு வாசித்திருந்ததால் இது சற்று எளிதாக இருந்தது. எனக்குச் சற்று சவாலாக இருந்தது தேர்வுகளே. ஒவ்வொரு தலைப்பை முடித்ததும் பத்து பன்முகத் தெரிவு வினாக்கள் வரும். அவற்றில் 90% எடுக்காவிட்டால் திரும்பவும் முயல வேண்டியிருக்கும். கடைசியாக 2000 வார்த்தைகளுக்கு ஒரு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் 15 மதிப்பெண்களுக்கு 13வது வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தோல்வி அடைய வேண்டி வரும். அடுத்து நம் கட்டுரையை சக-மாணவர்கள் மதிப்பிட அன...

ஓர் உதவி

நான் வரும் 10ஆம் தேதி காலையில் நத்தம் வருகிறேன். மதுரையிலோ திண்டுக்கல்லிலோ இறங்கி அங்கிருந்து நத்தம் போகத் திட்டம். மதுரை / திண்டுக்கல்லைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது காலையில் ஓரிரு மணிநேரத்திற்கு என்னை host பண்ண முடியுமா? கழிப்பறை பயன்படுத்தி, சற்று ஓய்வெடுக்க வேண்டும். விருப்பமுள்ளோர் என்னை abilashchandran70@gmail.comஇலோ 9790929153 எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

கைஜோசியக்காரர்

  மலையாள இயக்குநர், திரைக்கதையாளர், நடிகர் ஶ்ரீனிவாசன் தன் இளமையில் நடந்த ஒரு சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன்பான நேர்முகத்தில் சொல்கிறார் ("நேரே சொவெ"). அவர் அப்போது சினிமாவுக்கு வரவில்லை. அந்த உத்தேசமும் திட்டமும் கூட இல்லை. தனக்குப் பார்ப்பதற்கு சினிமாவுக்கான லட்சணமும் இல்லையென்றே அப்போது நினைக்கிறார். ஒருநாள் அவரது நண்பர் அவரைப் பிடிவாதமாக கைரேகை ஜோசியரிடம் கூட்டிப் போகிறார். இந்த ஜோசியர் துணிகட்டி மறைத்த ஓரிடத்தில் தரையில் அமர்ந்து கை பார்க்கிறவர். அவர் ஶ்ரீனிவாசனின் கையைப் பார்த்துவிட்டு "இந்த ஆள் சினிமாவில் ஏதோ ஒரு துறையில் வேலை பார்த்து பெரும் புகழும் அங்கீகாரமும் பெறுவார்." என்கிறார். ஶ்ரீனிவாசனுக்கு நக்கல் புன்னகை அரும்புகிறது. அவர் தன் நண்பரை சிரிப்புடன் பார்க்க அவரோ அமைதியாக இருக்கிறார். ஜோசியர் தொடர்ந்து "இவர் இந்தியாவின் உச்சப்பொறுப்பில் இருக்கிறவரின் கையில் இருந்து விருதைப் பெறுவார்" என்கிறார். ஶ்ரீனிவாசன் இந்த நபர் பெரிய மோசடிக்காரர், இதெல்லாம் நடக்கிற கதையா என்று நினைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீனிவாசன் அந்த ஜோசியர் சொன்ன எல்லா சிற...

கீர்க்கெகாட் - கொலையா ஆன்மீகமா?

  தத்துவத்துக்கு வருவோம் . இது அல்லது அது (either or) எனும் கோட்பாடு உண்டு . இது சரியா அது சரியா என்று கேட்டால் இரண்டு எதிரெதிர் முனைகளுக்கு நடுவே ஒரு புள்ளியைக் கண்டடைவது சரி என்பது . காதலா திருமணமா ? காதல் திருமணம் . கடவுளா கடவுள் எதிர்ப்பா ? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை , ஏதோ ஒரு ஆற்றலை நம்புகிறேன் , கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் . காங்கிரஸா பாஜகவா ? எனக்கு கட்சிகளில் நம்பிக்கை இல்லை , எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருப்பார்கள் , அவர்களை நம்புகிறேன் . இப்படிப் பேசுவதுதான் Either Or. இதை ஹெகல் முன்வைத்தார் . எதிரிடைகளின் மையத்திலே உண்மை இருக்கும் என்றார் அவர் . அறிவியலா மதமா என்றால் இரண்டும் மோதுகிற இரண்டுக்குமான பொதுப்புள்ளியிலே மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியப்படும் என்றார் ஹெகல் . ஹெகலின் தாக்கம் கொண்டவராக இருந்த கீர்க்கெகாட் பல விசயங்களில் ஹெகலையும் எதிர்க்கவும் செய்தார் . குறிப்பாக இந்த கமலஹாசத்தனமான இதுவும் அதுவும் கோட்பாடு விசயத்தில் .   சிலநேரங்களில் பகுத்தறிவை மீறி , நம்பிக்கையின் அ...