முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (2)

ஆச்சரியமாக தோற்றமளவிலான கலகத்தை பொறுத்தமட்டில் ஆண்களே முதலில் காயடிக்கப்பட்ட முகமற்றவர்களாகிறார்கள் . ஆனால் பெண்கள் தொடர்ந்து உடையிலும் செயல்களிலும் தம்மை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் . அவ்வப்போது கால் மேல் கால் இடுவதற்காக தண்டனைகள் , கண்டனங்களுக்கும் அவர்கள் ஆளானாலும் ஒருவித ஒழுங்குக்கு வராத தோற்றம் கொண்டவர்கள் அவர்களே . ஆண்களின் ஆடை வண்ணங்களைப் பாருங்கள் - ஒன்று இரண்டு நிறங்களுக்கு உள்ளாகவே சீருடை போல சட்டை , கால்சராய்களை அணிவார்கள் . கடைகளிலும் அவர்களுக்கு என்று தனித்துவமான வண்ணக்கலவைகள் , வடிவங்கள் , ஸ்டைலான பாணிகளில் உடைகள் அதிகம் வருவதில்லை . ஆனாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமாக மாறுபட்ட ஆடைகள் கிடைக்கிறன . ( இதனாலேயே ஆடைகளைத் தேர்வதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் .) மேற்குடன் ஒப்பிடுகையில் , வேலையிடங்களில் பெண் ஊழியர்களின் தோற்றத்தில் ஒரு அடையாளமின்மையை , ஒற்றைத்தன்மையை வலியுறுத்த இந்தியாவின் நிர்வாகங்களால் முடியவில்லை . 

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (1)

சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக ( யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான ) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காக கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார் . அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால் மேல் கால் இடாமல் , கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார் . பிற்பாடு யோசித்த போது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது . கால் மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை ( துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம் ). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார் . தன்னை அதிகார மையங்கள் கவனிக்கின்றன , கண்காணிக்கின்றன என உணர்ந்து கொள்ளும் ஒருவர் மூன்று விதமாக எதிர்வினையாற்றலாம் :

அயோத்தி தீர்ப்பு - கறுப்பு தினம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய ( மசூதி அமைக்கப்பட்டுள்ள ) நிலத்தில் மசூதியை அகற்றி இடித்து விட்டு அங்கு ராமர் கோயிலை எழுப்ப ஆணையிட்டுள்ளது . இந்த ஆலய நிர்மாணத்துக்கு மூன்று மாத காலக்கெடுவை விதித்து அதற்கு பொறுப்பாக ஒரு இந்து அறங்காவலர் குழுவை அமைக்கவும் அது அரசுக்கு ஆணையிட்டுள்ள்ளது . மற்றொரு பக்கம் இடிக்கப்பட்ட மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் நிலமொன்றில் மற்றொரு மசூதியை கட்டுவதற்கு வக்ப் அமைப்புக்கு நீதிமன்றம் அளித்துள்ளது . ஆனால் , திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல , இந்த மசூதியை ஒன்று மைய அரசோ மாநில அரசோ கட்டலாம் எனச் சொல்லும் நீதிமன்றம் இதன் மூலம் கட்டுமானப்பணி தொடர்ந்து தள்ளிப் போடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது . அதோடு ராமர் கோயிலுக்கு தந்துள்ளதைப் போல காலக்கெடுவை ஏன் மசூதி கட்டுவதற்கும் நீதிமன்றம் விதிக்க வில்லை எனும் கேள்வி முக்கியமானது . இன்னொரு பிரச்சனை எந்த அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது . இதைப் பற்றி பேசும் போது பல கேள்விகள் , சிக்கல்கள...

காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே

( பீட்டர் ஹேண்ட்கேயின் The Great Fall நாவலில் இருந்து ) உண்மை தான் : அவன் அவளை நேசிக்கவில்லை , அவளிடமே அதை சொல்லியும் இருக்கிறான் , துவக்கத்தில் ஒருமுறை , அதன் பிறகு மற்றொரு முறை ; அதன் பிறகு அதற்குத் தேவையும் இருக்கவில்லை . “ நான் உன்னை நேசிக்கல ”. முதல் தடவை இதை அவள் கேட்டாள் என்றால் இரண்டாம் முறை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை . தான் காதலை உணர்கிறேன் , தன்னால் அவனிடம் காதலைப் பற்றிப் பேச முடிகிறது என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது ; மேலும் அவன் அவளைத் தடுக்கவில்லை என்பதும் . “ நீ என் காதலன் . சின்ன வயதில் இருந்து இப்போது தான் முதன்முதலில் ஒருவரிடம் நான் நானாக இருக்க முடிகிறது . இந்த பகுதியில் யாருமே , இந்த நாட்டில் யாருமே நம்மளவுக்கு அதிக நேரம் படுக்கையின்பத்தை அனுபவிப்பதில்லை . ஒவ்வொரு முறையும் நாம் உலகை தோற்கடித்தோம் . உலகை நம் முன் மண்டியிட செய்தோம் . சர்வ சக்தி வாய்ந்ததாக , முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதாய் சொல்லப்படுகிற இந்த காலத்தை பழிவாங்கி இருக்கிறோம் . அவர்களை முறியடித்து விட்...

அயோத்தி தீர்ப்பும் நீதியும்

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாமா? அதுவும் புராணக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பளிக்கலாமா? கூடாது. இவ்வழக்கில் புராணப் பிரதிகளில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என சொல்லப்படுகிறது; இதுவே மக்களின் நம்பிக்கை என தீர்ப்பின் இணைப்பில் நீதிபதிகள் கூறி உள்ளார்கள். இப்படி ஒரு அபத்தமான கூற்று வேறு எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் கூறப்பட்டு நான் கண்டதில்லை. நாளை பல ஆபத்தான சமூகப் போக்குகள் தோன்ற, ஒரு வேளை வழக்குகளில் பிற்போக்கான தீர்ப்புகள் வழங்கப்பட இது வழி வகுக்கலாம்; முன்னுதாரணமாகலாம். ஒரு உதாரணத்திற்கு ராமாயணத்தில் சீதையின் கற்பு குறித்து ஊர் மக்கள் கேள்வி எழுப்பும் போது ராமர் அவளை தீக்குள் புகுந்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்கக் கேட்கிறார். நாளை இந்த நடைமுறையை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நடைமுறைப்படுத்தினால் அதை நாம் இதே போல ராமாயணத்தின் அடிப்படையில், ஒரு நம்பிக்கை எனும் பட்சத்தில், நியாயப்படுத்தலாமா? மகாபாரதப் போர் ஏன் நடக்கிறது? பாண்டவர்களின் மனைவியை கௌரவர்கள் அவமதித்ததால். இது புராணக்கதை. இதை இந்தியா முழுக்க இந்துக்கள் நம்பி ஏற்கிறார்கள். இதே போல ஒருவர் தன் மனைவியை அவமதித்தவரைக் கொ...

அட! அப்படியா?

“இந்துத்துவ , இஸ்லாமிய வாசகர் தரப்பு என ஒன்று இங்கே இல்லை .” - ஜெயமோகன் அமேசான் கிண்டில் போட்டி சர்ச்சையைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு சொல்கிறார் . காலையில் இருந்து நான் இந்த கூற்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் . நிஜமாகவா ? இஸ்லாமிய வாசகர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் , ஏனென்றால் இஸ்லாமிய வாழ்க்கையை எழுதுகிறவர்களும் இங்கு உண்டு ( மற்ற மதத்தவர்களும் அவர்களைப் படிப்பார்கள் என்றாலும் ). இந்துத்துவ வாசகத் தரப்பு என ஒன்றே ‘ இல்லை ’ என்பது தான் என்னை கூடுதலாக வியப்பில் ஆழ்த்துகிறது . 

பொருளாதாரம் சரிவடையும் போது யார் பலனடைகிறார்கள்?

விலைவாசி உயரும் போது வேலைப்பளுவும் அதிகமாகிறது . அப்போது ஊழியர்களின் உழைப்பு , உற்பத்தி ( வேலையின் வெளிப்பாடு , பொருண்மையாகவோ அல்லாமலோ ) அதிகமாகிறது . சம்பளமும் அதிகமாகிறது . ஆனால் இந்த சம்பளத்தை வைத்து வசதியாக வாழவோ சேர்த்து வைக்கவோ முடியாது . முன்பு ஏழெட்டு மணிநேரம் வேலை செய்தவர்கள் 12-14 மணிநேரங்கள் உழைக்கிறார்கள் . முன்பு 20,000 சம்பாதித்தவர் 40,000 சம்பாதிப்பார் . தாம் அதிக வேலை செய்வதற்கு ஈடாக கூடுதல் பணம் கிடைக்கிறதே என நினைப்பார் . ஆனால் விலைவாசி அனைத்துக்கும் மூன்று நான்கு மடங்கு அதிகரிக்கும் . அவர் செலவு செய்து அதே அளவுக்கே பொருள் வாங்குவார் . அவரது சேமிப்பும் அதிக அளவுக்கே இருக்கும் . அவருக்கு ஒரே மாயமாக இருக்கும் . முன்வாசல் வழியாக புன்னகையுடன் ஒருவர் மூட்டை நிறைய பணத்தைத் தருவார் ; உடனே பின்வாசல் வழியாக மற்றொருவர் கோபத்துடன் வந்து அதைப் பறித்துக் கொண்டு போய் விடுவார் . இவரும் அவரும் ஒரே போல தோன்றுகிறாரே என அவருக்கு குழப்பமாக இருக்கிறது . என்னதான் நடக்கிறது ?