முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை?

ஓஷோ, சத்யசாய் பாபா, அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா, ஜக்கி வாசுதேவ், ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள், ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது, ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை. இவர்களுக்கு குடும்பமில்லை, இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது, இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து, இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது, சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார்; பெரும்படிப்பாளரான, அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மேம்போக்கான மரபான பொது உளவியலே தமது பணத்தை, நகைகளை சாமியார்களின் காலடியில் கொண்டு போய் வைக்க இந்த பக்தர்களைத் தூண்டுகிறது. ...

காவலர்களின் சேடோமெசோக்கிசம்

சாத்தான்குளம் சிறைப்படுகொலை பற்றி நினைக்கையில் மனம் உடைந்து போகிறது . மனிதனை மனிதன் இப்படியெல்லாமா வதைப்பான் , சிறுக சிறுக துடிக்க வைத்துக் கொல்வான் , அதுவும் சுற்றிலும் உள்ள மக்கள் அந்த இருவரும் அலறுவதை இரவு முழுக்க கேட்டு வெறுமனே இருக்க இந்த கொடூரம் , அதனாலான படுகொலை நடந்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க நம்பிக்கை வரவில்லை , மனம் ஆறவில்லை .   ஏழெட்டு லுங்கிகள் நாள் முழுக்க தொடர்ந்து மாற்றினாலும் நிற்காதபடி பென்னிக்ஸுக்கு பின்புறமிருந்து ரத்தம் தொடர்ந்து வந்திருக்கிறது . காரணம் போலீசார் தாக்குதலின் போது ஆசன வாயில் ஏதேதோ பொருட்களை நுழைத்து வன்கொடுமை பண்ணியிருப்பது . இது அதிகார வெறியில் நடந்ததா அல்லது இதன்பின்னர் சாடிஸ , சேடோமஸோக்கிச மனநிலை - ஒருவர் தன்னெதிரே வலியில் கதறுவதைக் கண்டு பாலின்பம் அடைவது - செயல்பட்டுள்ளதா ? என்னுடைய ஒரு சந்தேகம் பென்னிக்ஸ் தன் தந்தையை அடிக்கும் போலீஸாரை காவல் நிலையத்தில் வைத்துக் கண்டித்த போது அங்கிருந்த ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் துணை ஆய்வாளர் பால்துரை இருவரில் ஒ...

ஆணவக் கொலைகளும் நாம் கொள்ளும் குற்றவுணர்வும்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு குறித்து அரற்றுகிறவர்கள் ஒருவித சாதிக் குற்றவுணர்வை , சாதியும் வேண்டும் அதே சமயம் அது நீதியுடனும் இருக்க வேண்டும் எனும் போலி இரட்டை மனப்பான்மையுடன் சிந்திக்கிறார்கள் என டி . தர்மராஜ் ஒரு பதிவை இட்டிருந்தார் . வழக்கம் போல “ என்ன இவர் இப்படி சொல்கிறார் ?” என ஒரு நொடி தோன்றினாலும் அவர் குறிப்பிடும் உண்மை பளிச்சென மறுநொடி விளங்கியது . ஆம் உண்மையே . சாதியம் குறித்த மேல் மற்றும் இடைசாதியினரின் கவலைகள் குற்றவுணர்வில் இருந்து வருவதே .   நான் இதனுடன் ஆற்றாமையையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன் . நீங்கள் சட்டரீதியாக தீண்டாமையை தடை செய்யலாம் , சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு மெலிதான பாதுகாப்பு வலையை உருவாக்கலாம் , ஆனால் இதையெல்லாம் செய்யும் போதே இவை பாசாங்கு மட்டுமே , நடைமுறையில் பெரிய அளவில் பயனளிக்காதவை என உங்களுக்கு உள்ளூரத் தெரிந்திருக்கும் . சிலர் அமைப்பு ரீதியாக இதை சீர்திருத்த முடியுமா என யோசிப்பார்கள் . சிலர் ஆற்றாமையில் வெதும்புவார்கள் . சிலர் கூச்சப்படுவார்கள் ,...

விராத் கோலி – எங்கிட்ட மோதாதே

2011 உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் தளர்ந்து பிறகு மீண்டு வரும் வேளையில் யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டி அளித்தார் . அதில் “ காலத்தில் திரும்ப சென்று நான் வேறு விதமாய் ஆட விரும்பினால் அது விராத் கோலியை போலத் தான் இருக்கும் . அவரது கடும் உழைப்பு , அர்ப்பணிப்பு , கட்டுப்பாடு , ஒழுக்கம் ஆகிய பண்புகள் எனக்கும் இருந்திருக்க கூடாதா என ஆசைப்படுகிறேன் ” என்றார் . ஒருநாள் கிரிக்கெட்டின் அசுரர்களில் ஒருவரான யுவ்ராஜ் ஒரு இளம் வீரரை பற்றி இதை சொல்கிறார் என நினைவில் கொள்ள வேண்டும் . திறமையும் கடும் உழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் நம்பர் 1 ஆகலாம் என்பதற்கு கோலி ஒரு உதாரணம் .

நானே போலீஸ், நானே திருடன்

அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனும் கறுப்பர் அமெரிக்காவில் சந்தேகத்தின் போலீசாரால் சிலரால் பெயரில் சாலையில் கிடத்தி கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் பலத்த கண்டனத்தை , எதிர்ப்பை அமெரிக்காவில் ஏற்படுத்த , பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களும் சில வெள்ளையர்களும் கூட போலீஸ் ஒடுக்குமுறைக்கும் இனவாத கலாச்சாரத்துக்கும் எதிராக சாலையில் திரண்டு போராடினர் . இந்த போராட்டம் ஒரு நெருப்பாற்றைப் போல அமெரிக்கா எங்கும் சுழித்தோடியது . இதை பயன்படுத்தி மக்கள் டிரம்ப் அரசின் மீதான தமது கோபத்தை முழுக்க வெளிப்படுத்தினார்கள் என நினைக்கிறேன் . மக்கள் திரளின் எதிர்ப்புணர்வை சமாளிக்கத் தெரியாமல் அரசு நிர்வாகம் திகைத்து நின்று விட்டது . இப்போது காவல்துறை ஒரு புது உத்தியை கையில் எடுத்துள்ளது : நேற்று ஒரு வினோதமான சேதியைப் படித்தேன் - காவலர்களில் பலர் , அதிலும் கணிசமான வெள்ளை காவலர்கள் , காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என . இது ஏன் ?

நாம் ஏன் சுயமரியாதையற்ற பிச்சைக்காரர்களாக இருக்கிறோம்?

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் நேற்று ஒரே நாளில் 1300 தொழிலாளிகள் ( நமது விகடன் பாணியில் ) வேலை நீக்கம் செய்யப்பட்ட சேதி அதிர்ச்சி அளிப்பதுடன் ஆத்திரத்தையும் மூட்டுகிறது . லாபம் இல்லாவிட்டால் ஒரு தொழிற்சாலை யூனிட்டை மூடுவது நிர்வாகத்தின் சுதந்திரம் , ஆனால் போதிய அவகாசம் அளிக்காமல் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை , எளிய மக்களை , இப்படி வீட்டுக்கு அனுப்பி வயிற்றில் அடிப்பது அநீதி மற்றுமல்ல சட்டவிரோதமும் கூட . இந்த தொழிற்சாலை இப்படி செய்யப்போகிற விசயம் அரசுக்கும் தெரியும் , ஆனால் எல்லா அரசுகளையும் போல கர்நாட அரசும் இப்படியான ஒரு பிரச்சனை வரும் போது முதலாளிகளுக்கே கூஜா தூக்குகிறது .

அம்மா வந்தாளா வந்தாரா?

பேஸ்புக்கில் ஹேமா செபைர் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பியிருந்தார் : நான் அப்பா வந்தான் என எழுதுவதில்லை , ஆனால் அம்மா வந்தாள் , போனாள் , சொன்னாள் என சுலபத்தில் சொல்கிறோம் . சில இடங்களில் அம்மா வந்தார் , போனார் என்றும் எழுதுகிறோம் . ஏன் இந்த பாகுபாடு ?