முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நாவலைத் திருத்துகிற மேஜிக், அதன் இன்பம்!

ஒரு நாவலை நான்கைந்து முறையாவது திருத்துவது மிக மிக அவசியமான ஒன்று. அதனால் நாவல் வெளியிடுவது தாமதமாகலாம். சில நேரங்களில் கதையமைப்பிலோ முக்கியமான காட்சிகளிலோ பாத்திரங்களின் இயல்பிலோ உள்ள ஒரு அடிப்படையான தவறு நம் கவனத்துக்கு வராமல் தப்பி விடும். அது கண்ணில் படவே ஓராண்டுக்கு மேல் ஆகும். ஏனென்றால் எழுத எழுத அந்நாவல் குறித்தொரு புகைமூட்டம் நம் மனதில் உண்டாகும். நாம் அந்த மூட்டத்தின் வழியே கலங்கலாகத் தான் நாவலை நோக்குவோம்.   திரும்பத் திரும்ப திருத்துவதன் ஒரு முக்கிய அனுகூலம் நாவலுக்கு புதிய புதிய அர்த்த அடுக்குகளை உருவாக்க முடியும் என்பது. முதல் பிரதியில் பெரும்பாலும் ஒற்றைப் பொருளே வரும். அல்லது அதிகமாக சில விசயங்களை அழுத்தி சொல்லியிருப்போம். சில விவரணைகளை, நீளமான வசனங்களை முடிதிருத்துநர் கொத்தாக மயிரை எடுத்து நைசாக வெட்டுவதைப் போல நாம் நீக்கிவிட்டால் அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்க அழகாக இருக்கும். நாவல் நன்றாக மூச்சு விடுவதைப் பார்க்க நமக்கும் நிம்மதி கிடைக்கும். சில அத்தியாயங்களை நீக்கினால் கதை இன்னும் சரளமாக ஒழுகுவதைப் பார்க்க முடியும். இதையெல்லாம் எழுதுகையில் துல்லியமா...

என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா?

War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான். இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன்...

"ஜெயஜெய ஜெயஜெய ஹெ"

அந்த பிரசித்தமான அந்த வடிவேலு-கோவை சரளா நகைச்சுவைக் காட்சியுடன் 90s ரோஹிணி, ரேவதி பாணி பெண்ணிய காட்சிகளையும் சேர்த்து மிக்ஸியில் ஓட்டினால் இந்த படம் வந்துவிடுகிறது. இந்த படத்தின் பலம் கடைசி வரை வரும் இயல்பான செமையான டைமிங் கொண்ட நகைச்சுவை. நகைச்சுவையை எடுத்துவிட்டால் இபடத்தில் ஒன்றுமே இல்லை.  அந்த கராத்தே சண்டையை எடுத்துக் கொள்வோம் - யாராவது யுடியூபில் பார்த்து இந்தளவுக்கு கராத்தேயில் நிபுணராக முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போல தனக்கு எந்த அனுபவமும் இல்லாத கறிக்கோழி தொழிலில் நாயகி களமிறங்கி பத்து நொடிகளில் தன் கணவனையே அதில் முறியடிப்பதெல்லாம் ரொம்ப ஓவராக, எதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கிறது.  பொதுவாக நகைச்சுவைப் படங்களின் முடிவில் ஒன்று வலுவான சமூகப்பகடி இருக்க வேண்டும் - "சூது கவ்வும்" போல. அல்லது கதாபாத்திரங்கள் தம் குறையை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது உணரவாவது வேண்டும் - கமல்-கிரேஸி மோகன் டைப் நகைச்சுவை படங்களைப் போல. முதலாவதை அரிஸ்டோபேனஸ் பாணி இன்பியல் என்றும் இரண்டாவதை மியாண்டர் பாணி இன்பியல் என்றும் பழங்கால கிரேக்க இன்பியல் ஆசிரியர்களின் பெய...

பெண்ணாதிக்கமும் ஆண்களின் நெருக்கடியும்

ஆண்களின் நெருக்கடி எல்லாரும் தவறாமல் கேட்க வேண்டிய உரை நவீன ஆண்களின் நெருக்கடி பற்றிய வேரல் பேரலின் டெட் டாக்! எப்படி கடந்த சில பத்தாண்டுகளில் அப்பா இல்லாமல் வளரும் ஆண் குழந்தைகள் குற்றவாளிகளாக, தன்னம்பிக்கை அற்றவர்களாக, தற்கொலை எண்ணம் மிக்கவர்களாக மாறுகிறார்கள், எப்படி உலகம் முழுக்க ஆண் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்த்துள்ளது, இதற்கும் சமூகம் ஆண்களைக் கைவிட்டதற்கும், ஆசிரியர்கள் அதிகமாக பெண்களாக உள்ளதற்கும் உள்ள தொடர்பைப் பேசும் வேரன் பேரல் இன்றைய ஆண் குழந்தைகளும், இளைஞர்களும் ஒரு பெரும் நெருக்கடியை, தந்தையின்மையின் நெருக்கடியை சந்திப்பதாக சொல்லுகிறார். தந்தை என்பது இங்கு ஒரு குறியீடு தான் என நினைக்கிறேன். வேரன் பேரல் குறிப்பிடாத ஒரு விசயமுண்டு - தந்தைகள் முக்கியத்துவம் இழக்கும் சமூகங்களிலே சர்வாதிகார தலைவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவ்விதத்தில் கடந்த பத்தாண்டுகளில் மோடி பெற்றுள்ள ஆராதனை, புகழ், ஏற்புக்கு நம் சமூகம் பெண்-வழிபட்டதாக, ஒருதலைப்பட்சமாக மாறுவதற்கும் ஓரு நுட்பமான பிணைப்புள்ளது. உலகம் முழுக்க ஆண் நெருக்கடி அதிகமாக அதற்கு ஈடு செய்ய சினிமாவில், விளையாட்டுகளில...

மணலின் கல்லறை - கீதாஞ்சலி ஷ்ரி

  "ஒரு கதை தன்னையே சொல்லுகிறது. எல்லா கதைகளையும் போல அது முழுமையாக இருக்கலாம், முழுமையற்றும் இருக்கலாம். இந்த குறிப்பிட்ட கதைக்கு ஒரு எல்லையும், தோன்றியது போல வந்து போகிற பெண்களும் இருக்கிறார்கள். பெண்களும் எல்லையும் வந்து விட்டால் கதையால் தன்னையே எழுத முடியும். வெறுமனே பெண்கள் மட்டுமே கூட போதும். பெண்கள் தம்மளவில் கதைகளே, பெண்கள் முழுக்க காற்றில் மிதக்கிற, ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் ஏற்ப வளைகிற உணர்வுச் சலனங்களால், முணுமுணுப்புகளால் ஆனவர்கள்." Tomb of Sand, Geetanjali Shree முதல் அத்தியாயத்தில் இருந்து ஒரு பத்தி

சாருவைப் பற்றி ஜெமோ சொல்லாமல் விட்டது

ஜெயமோகனின் சிறந்த உரை என்று இதைக் கூற முடியாது. ஜெயமோகனின் குரலில் திரியில் நெருப்பு போல இயங்குவது ஒரு லட்சியவாதம், அவர் உறுதியாக நம்பும் ஏதோ ஒன்று. அது உள்ளே வரும் போது அவர் மிக மிக உறுதியாக சொல்லும் போது ரொம்பச் சிறப்பாக பேசுவார். இந்த உரையிலேயே அவர் விஷ்ணுபுரம் அமைப்பைப் பற்றி பேசுகையில் அது உள்ளே வந்து சாருவைப் பற்றி பேசுகையில் வெளியே போய் விடுகிறது. திரி அணைந்து இருள் சூழ்கிறது. ஒரு காரணம் சாருவை அவர் வரலாற்று ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியிலும் நிறுவ முயலவில்லை என்பது. அசல்தன்மை சாருவை கலைஞனாக்குகிறது, அதற்காக விருதை அளிக்கிறோம் என்பது போதுமான நியாயமல்ல. காளமேகப் புலவர் என்று சொல்லி முடிப்பதும் சரியல்ல. அதே நேரம் ஜெமோவின் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு சில கட்டுரைகளில் சாருவை தத்துவார்த்தமாகவும் வரலாற்றுரீதியாகவும் வரையறுக்கிற முயற்சி இருந்தது. ஜெயமோகனாலும் அப்படிப் பேச இயலும். இப்போதெல்லாம். அப்படி சிந்திப்பதே தனக்கு ஒவ்வாமை என்றால் அவர் தன் வழமையான ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் சாருவின் பிரதிகளில் இருந்து சில பத்திகளை வாசித்துக் காட்டி விளக்கமாகப் பேசியிருக்கலாம். அதையும் செய்ய...

எதற்காக இந்நூல் எழுதப்பட்டது?

  "நான் ஒரு இலக்கிய வாசகனாக படிக்கத் துவங்கிய போது, சமூக அரசியல் விசயங்களில் ஆர்வம் கொண்டு தோழர்களுடன் விவாதித்துப் பழகிய போது, பின்னர் எழுத வந்த போது ‘மாற்றுத்திறனாளி’ எனும் சொல் புழக்கத்தில் இல்லை, அதனாலே மாற்றுத்திறனாளிகள் குறித்த கதையாடல்களும் தமிழில் அனேகமாக இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியின் உலகை ஊடகங்கள் அன்று பொருட்படுத்தவே இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வை, அவனை மையமாக்கி பேசிய முதல் படத்தை ஒரு உலக சினிமா விழாவிலே கண்டேன். இன்றும் அத்தகைய சினிமாக்கள் தமிழிலோ வேறு இந்திய மொழிகளிலோ இல்லை. தமிழ் இலக்கியத்திலோ வேறு இந்திய மொழி இலக்கியங்களிலோ நான் படித்தவரையில் இல்லை. அதாவது மாற்றுத்திறனாளிகளை ஒரு பிரச்சினையின், ஒரு மன இயல்பின் உருவகமாக மாற்றி அவர்களை உடலற்றவர்களாக சித்தரிக்கிற படைப்புகளே இருந்தன, இருக்கின்றன, அவர்களை அவர்களாக மட்டுமே பார்க்கிற படைப்புகள் இல்லை. இன்றும் தமிழ் இலக்கியத்தில் வெகுசொற்பமான மாற்றுத்திறனாளி எழுத்துக்கள் உள்ளன. விவாதங்கள் இல்லை, சித்தரிப்புகள் இல்லை, பேச்சே இல்லை, இதனால் மாற்றுத்திறனாளிகள் ஒரு புலப்படாத உயிரிகளாக மாறியுள்ளதைக் கண்டேன், இந்நிலையை...