முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிக்பாஸில் இருந்து கொண்டு முற்போக்கு பேசும் அபத்தம்

“ஊடகமே செய்தி” என்பது ஊடகவியல் ஆய்வாளர் மெக்லூஹலின் முக்கியமான கூற்று. அவர் சொல்ல வந்ததென்ன? டிவி ஊடகம் வந்த பின் மக்கள் இந்த உலகைப் பார்க்கும்விதமே மாறிவிட்டது, ஒரு செயல்-அதன் எதிர்வினை என்று அல்லாமல் ஒரு பிம்பம், அதனிடத்தில் மற்றொரு பிம்பம் என உலகம் மாறிவிட்டது என்கிறார். டிவியும், இன்று இணையமும் வந்த பின்னர் சொற்கள் கனமிழந்து விட்டது, கருத்துக்கள் சாரமற்று விட்டது இப்படித்தான். அந்த ஊடகம் எப்படி நம்மைக் கையாள வேண்டும் என நினைக்கிறதோ அதனுள் போகும் போது நாமும் அவ்வாறே ஆகிறோம். பிக்பாஸில் “எல்லாரும் இங்கே சமம்” என்று கூறிவிட்டு அதே நபர் “பிக்பாஸ் தேங்க்யூ” என்று சொல்லும் போது, அந்த சமத்துவமே கேலிக்கூத்தாகிறது. எல்லாரும் சமம் என்றால் பிக்பாஸ் என ஒருவர் எப்படி இருக்க முடியும்?  பிக்பாஸின் விளையாட்டுகள் எனப்படும் ஒடுக்குமுறை பொழுதுபோக்கின் பகுதியாக ஒருவர் பாதி மீசையை எடுக்கிறார், ஒருவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளுகிறார் என்றால் அங்கு அவர் அதன் அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ள முடியாதபடி அதனுடன் கட்டுண்டிருக்கிறார் எனப் பொருள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அது ...

வனிதா சொல்லும் உண்மை

வனிதா ஒரு புத்திசாலி அல்ல, அதனாலோ ஏனோ அவர் சொல்வதில் எப்போதும் வெளிப்படைத்தன்மையும் உண்மையும் இருக்கும். இங்கு வனிதா சொல்லியிருக்கும் உண்மை இன்னும் முக்கியமானது. ஏனெனில் அரசியல் சரிநிலை கருதி நாம் வாய்மூடிக் கடந்து விடும் போது அவர் உடைத்து சொல்லியிருக்கிறார், ராஜா அம்மணமாகப் போகிறார் என சிறுவன் கூவியதைப் போல. ஆம், திருமா விக்ரமுக்காக புரொமோஷன் பண்ணுவது தப்புதான். பிக்பாஸ் என்பது மனிதர்களை ஒரு இடத்தில் பூட்டி வைத்து அவர்கள் தமக்கேற்ப ஆட வைத்து கண்காணித்து இந்த அடிமை வணிக விளையாட்டு பொழுதுபோக்கை பார்வையாளர்களை நுகர மட்டுமல்ல, அதை மறைமுகமாக நடத்துபவர்களாகவும் மாற்றும் நிகழ்ச்சி. அதாவது இந்நிகழ்ச்சி நம்மில் ஒவ்வொருவரையும் கண்காணிப்பாளனாக, சர்வாதிகாரியாக மாற்றுகிறது. உடல் மீது கண்காணிப்பின், கட்டுப்படுத்தலின் வழி அதிகாரம் செலுத்துவதை இயல்பாக்குகிறது. இது நம் சமூகத்துக்கு மிக மிக ஆபத்தான ஒன்று - இதைப் பார்த்து ஏற்றுக்கொண்டு விட்டால் அலுவலகங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இது நடக்கையில் அது தவறாக நமக்குத் தெரியாது என்பதை எனது பிக்பாஸ் நூலில் நான் பேசியிருக்கிறேன்.  விக்ரம் என...

ரோஹித் ஷர்மா - அவநம்பிக்கை நாயகன்

இன்றைய ஆட்டத்தில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து ஆணி இந்த 350க்கு பக்கத்தில் வருவது ஒரு அசாதாரண முயற்சி. வாழ்த்துகள்.  அதே நேரத்தில், நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியா கிட்டத்தட்ட தோற்கும் நிலைக்கு சரிந்து பின்னர் மயிரிழையில் தப்பிக்க காரணம் என்ன?   முதல் முக்கியமான காரணம்  மோசமான பந்துவீச்சாளர்களின் தேர்வே - குறிப்பாக நல்ல ஆட்ட நிலையில் இருந்த உம்ரான் மாலிக்கை நீக்கி அந்த இடத்தில் மட்டையாட்டத்தை காரணம் காட்டி ஷர்துல் தாகூரை உள்ளே கொண்டு வந்தது. எதற்கு உம்ரான் மாலிக்கின் இடத்தில் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்? ஏனென்றால் அக்ஸர் பட்டேல் தன் உறவினரின் திருமணத்துக்காக விடுப்பெடுக்க, ராகுலும் அதே போல ஒரு காரணத்துக்காக விடுப்பெடுக்க, ஷ்ரேயாஸ் காயம் காரணமாக வெளியேற மத்திய வரிசை சற்று அனுபவம் குறைந்ததாகிறது. உடனே ரோஹித் பதற்றமாகி மட்டையாட்டத்தை பலமாக்க ஒரு பவுலரை நீக்கி தாகூரை கொண்டு வருகிறார். பிரச்சினை என்னவென்றால் எட்டாவது எண்ணில் வருகிற ஆல்ரவுண்டர் ஒரு ஜடேஜா, பிரேஸ்வெல் போன்றவர் என்றால் அது நியாயமான தேர்வு, ஆனால் தாகூர்?  இ...

மனம் கனியாமல் இருக்குமா?

மனம் கனிந்து மனம் கனியாமல் இருக்குமா? "மனம் கனிந்து...." இந்த அற்புதமான பாடலைக் கேட்கையில் முன்பு எம்.கெ.டி பாகவதரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது - அப்போது பாகவதருக்கு ஏழெட்டு வயதிருக்கும். பக்கத்து ஊருக்குப் போனவர் தொலைந்து போகிறார். பெற்றோர்களால் எவ்வளவு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தன் பாட்டுக்கு நடந்து ஒரு கோயில் நடையை அடைகிறார். அவருக்குப் பசிக்கிறது. வழி தெரியவில்லை. பயமாக இருக்கிறது. அதனால் அவருக்கு தெரிந்த ஒரே விசயத்தைப் பண்ணுகிறார்: அவருக்குத் தெரிந்த ஒரு அழகிய கீர்த்தனை ஒன்றை பாட ஆரம்பிக்கிறார், சத்தமாக கணீரென்று. சற்று நேரத்தில் அப்பாடலை ரசிக்க ஒரு சிறு கூட்டம் சேர்கிறது. அவர்கள் அவரை மேலும் பாடல் சொல்கிறார்கள். மேலும் மேலும் பல பாடல்களைப் பாடுகிறார். சிறுகூட்டம் பெருங்கூட்டம் ஆகிறது. அவர்கள் அப்பையனுக்கு கோயில் பிரசாதமும் வேறு உணவுகளும் வழங்குகிறார்கள். அவனைக் கொண்டாடுகிறார்கள். அவன் தான் தொலைந்து போனவன் என்பதையே மறந்து எதையோ கண்டுபிடித்தவன் ஆகிறான். மகிழ்கிறான். அவனை தம் வீட்டில் தங்க வைக்க ஆளாளுக்கு போ...

உண்மையை சொன்னேன்

வேறு ஒருவரின் பொங்கல் வாழ்த்துகள் பதிவில் நண்பர் பால்ராஜ் துளசிரா இப்படி எழுதியிருக்கிறார். இதைப் போல வேறு பலர் என்னிடம் போன் செய்து சொல்லுகிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த போதும், என்னுடைய நூல் வெளியீட்டின் போதும் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சி வெளியில் ஒரு இலக்கிய அமைப்பை சேர்ந்த நண்பர் என் கையைப் பற்றிக் கொண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் - "உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. படிக்கும் போது அது வெளிப்படையாகவே தெரிகிறது."  மனித உறவுகள், நடத்தை, குடும்ப உறவுகள் பற்றி பாசாங்கின்றி எழுதுகிறேன் என்றார். "அப்படி எழுதுவதால் சிலர் என்னை வெறுக்கக் கூடும் என்றறிவேன். ஆனால் அது என் மீதானது, ஒரு கருத்தின் மீதானது என்றும் அறிவேன். அதனால் பிரச்சினையில்லை." என்றேன். வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதோர் நேரடியாக என்னைக் காணும் போது வந்து பாராட்டும் போது வெளிப்படையாகப் பேசுவோருக்கு இங்கு எந்தளவுக்கு பஞ்சம் நிலவுகிறது, சமூகவலைதள யுகத்தில் status quoஐ ஒட்டி எழுதுவோராக நாம் எந்தளவுக்கு மாறிவிட்டோம் என வியப்பேற்படுகிறது. போனிலோ நேரிலோ பேசும் கருத்துக்கள...

ஏன் இதையே திரும்பத் திரும்ப எழுதுகிறேன்?

 நான் ஏன் இப்படி தொடர்ச்சியாக ஆண்-பெண் பிரச்சினைகள், விவாகரத்து, குடும்ப ‘நல’ சட்டங்களின் ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு என்றே பேசிக்கொண்டிருக்கிறேன் என ஒரு நண்பர் கேட்டார். ஏன் என்றால் வேறு யாரும் பேச மறுக்கிறார்கள். நான் ஏன் ஆண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆண்களில் பலர் இவ்விசயத்தில் அடிமுட்டாள்கள். பெண்களுக்கு இயற்கையே நிறைய நடைமுறை அறிவைக் கொடுத்திருக்கிறது. அதனாலே ஒரு வழக்கு முடியும் போது ஆண்கள் முடிவில் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கிறார்கள். பெண்கள் கையில் சில / பல லட்சங்களும் குழந்தைகளுமாக திரும்ப செல்கிறார்கள். இந்த யுத்தத்தில் எல்லாவற்றையும் இழக்கப் போகிற ஆண்களுக்காக நான் ஒருத்தன் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது - இம்மாதிரி பிரச்சினைகளில் மாட்டி அடிவாங்கிய, தம் மொத்த சம்பாத்தியமான நாற்பது, ஐம்பது லட்சங்களை இழந்த எழுத்தாள நண்பர்களை அறிவேன். ஆனால் அவர்களும் அமைதியாக கடந்து விடவே எத்தனிக்கிறார்கள். நாம் ஊரில் இருக்கிற அத்தனை அநீதிகளைப் பற்றியும் தேடித்தேடிப் பேசுவோம். ஆனால் நமக்கு நம் கண்முன் நடந்த ஒன்றை நோக்கி கண்ணை ம...

சினிமாவில் போலி நீதிமன்ற சித்தரிப்புகள்

  நேற்று இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வக்கீல்களையோ நீதிமன்றத்தையோ பற்றி விமர்சித்து படமெடுப்பதில்லை, அதற்கு வக்கீல்கள் பற்றின பயமே காரணம் என்றார். இருக்கலாம். பொதுவாக நம் படங்களில் வக்கீல்கள் நீதியின் நாயகர்களாக வருகிறார்கள். ஆனால் வக்கீல் சந்துரு மட்டுமே உலகம் அல்ல. 99% வக்கீல்கள் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், வேலையை செய்வதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் ரௌடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். செய்யாத குற்றத்துக்கு மனிதர்களை வருடக்கணக்கில் அலைய விடுகிற, நோகடித்து கடனாளி ஆக்குகிற களமாக நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவில் பாருங்கள் - நீதிமன்றமே நீதியைப் பெற்றுத்தருகிற இடமாக இருக்கிறது. அப்படி ஒரு சில வழக்குகளில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் அந்த நீதிமன்ற வாயில்களில் தம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்? இப்படி பொய் பொய்யாக படமெடுக்கும் இயக்குநர்கள் இந்த உண்மைகளையும் பேசலாம் அல்லவா? குறைந்தது ஒரு வழக்கை நடத்த எவ்வளவு காலமாகும், எவ்வளவு செலவாகும் என்றாவது சொல்லலாம் அல்லவா? மாட்டார்கள்.